லஞ்ச் பாக்ஸ் ரெசிபி: முந்திரி, தேங்காய் சேர்த்த இந்த சாதம்... இப்படி செஞ்சு குடுத்தா யார்தான் வேணாம் சொல்லுவாங்க!

முந்திரி, தேங்காய் சேர்த்து லஞ்ச் பாக்ஸ்க்கு சுவையான சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

முந்திரி, தேங்காய் சேர்த்து லஞ்ச் பாக்ஸ்க்கு சுவையான சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
தேங்காய் சாதம்

ஈஸியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தேங்காய் முந்திரி போட்டு சுவையான தேங்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

உதிரியாக சமைத்த சாதம் - 2 கப்
துருவிய தேங்காய் - அரை கப்
எண்ணெய் அல்லது நெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை அல்லது முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2-3  
இஞ்சி 
வெங்காயம் - 1  
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்  
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வேக வைத்த காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி போன்றவை) - கால் கப்  

செய்முறை:

Advertisment
Advertisements

சமைத்த சாதத்தை நன்றாக ஆற வைக்கவும். தேங்காயை துருவி தயாராக வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை அல்லது முந்திரி சேர்த்து பருப்பு பொன்னிறமாக வறுக்கவும்.

கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
வெங்காயம் சேர்ப்பதாக இருந்தால், இப்போது சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஒரு நிமிடம் வதக்கவும். 

மசாலாவின் பச்சை வாசனை போக வேண்டும். துருவிய தேங்காய் சேர்த்து குறைந்த தீயில் 2-3 நிமிடம் வதக்கவும். தேங்காயின் நிறம் மாறாமல் அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கினால் போதும். அதிகமாக வறுக்க வேண்டாம். வேக வைத்த காய்கறிகள் சேர்ப்பதாக இருந்தால், இப்போது சேர்த்து ஒரு முறை கலக்கவும். 

தேவையான அளவு உப்பு சேர்க்கவும். ஆற வைத்த சாதத்தை கடாயில் சேர்த்து, மசாலா மற்றும் தேங்காயுடன் உடையாமல் மெதுவாக கலக்கவும். எல்லா சாதத்திலும் மசாலா மற்றும் தேங்காய் நன்றாக கலந்ததும் அடுப்பை அணைக்கவும்.

சுவையான கோக்கனட் மசாலா ரைஸ் தயாராகிவிட்ம். இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது அப்பளம், சிப்ஸ் அல்லது தயிர் பச்சடியுடன் பரிமாறலாம். தேங்காய் சாதத்தை விட இது சற்று காரமாகவும், அதிக சுவையுடனும் இருக்கும்.  

Coconut and its health benefits

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: