லஞ்ச் பாக்ஸ் ரெசிபி... வெறும் 10 நிமிடம் போதும்; இப்படி செஞ்சு குடுத்தா இனி மிச்சம் வைக்க மாட்டாங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இது. வெறும் 10 நிமிடம் போதும், ஒரு ஜீரா ரைஸ், தால் ஃபிரை, காலிபிள்வர் மசாலா, தொட்டுக்கொள்ள வெங்காயம் தக்காளி சாலட் மற்றும் பழம் சூப்பரனா லஞ்ச் பாக்ஸ் உணவு, இப்படி செய்துகொடுத்து பாருங்கள் மிச்சம் வைக்கவே மாட்டார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இது. வெறும் 10 நிமிடம் போதும், ஒரு ஜீரா ரைஸ், தால் ஃபிரை, காலிபிள்வர் மசாலா, தொட்டுக்கொள்ள வெங்காயம் தக்காளி சாலட் மற்றும் பழம் சூப்பரனா லஞ்ச் பாக்ஸ் உணவு, இப்படி செய்துகொடுத்து பாருங்கள் மிச்சம் வைக்கவே மாட்டார்கள்.

author-image
WebDesk
New Update
lunch

ஒரு ஜீரா ரைஸ், தால் ஃபிரை, காலிபிள்வர் மசாலா, தொட்டுக்கொள்ள வெங்காயம் தக்காளி சாலட் மற்றும் பழம் சூப்பரனா லஞ்ச் பாக்ஸ் உணவு, இப்படி செய்துகொடுத்து பாருங்கள் மிச்சம் வைக்கவே மாட்டார்கள். இந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இந்தியன் ரெசிபிஸ் தமிழ் (@Indian Recipes Tamil) என்ற யூடியூப் சேனலில் செய்துகாட்டியுள்ளனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இது. வெறும் 10 நிமிடம் போதும், ஒரு ஜீரா ரைஸ், தால் ஃபிரை, காலிபிள்வர் மசாலா, தொட்டுக்கொள்ள வெங்காயம் தக்காளி சாலட் மற்றும் பழம் சூப்பரனா லஞ்ச் பாக்ஸ் உணவு, இப்படி செய்துகொடுத்து பாருங்கள் மிச்சம் வைக்கவே மாட்டார்கள். இந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இந்தியன் ரெசிபிஸ் தமிழ் (@Indian Recipes Tamil) என்ற யூடியூப் சேனலில் செய்துகாட்டியுள்ளனர்.

Advertisment

முதலில் நாம் காலிபிளவர் மசாலா செய்வோம். முதலில் 200 கிராம் காலிபிளவர் சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளுங்கள். ஸ்டவ்வைப் பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். அதில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் போடுங்கள். நன்றாகக் கலக்குங்கள். அதனுடன் காலிபிளவரை போடுங்கள் 1 நிமிடம் கழித்து காலிபிளவரை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 

இப்போது மசாலா அரைக்க வேண்டும்.  1 துண்டு இஞ்சி, 5 பல்லு பூண்டு, 1 பச்சை மிளகாய், 1 டேபிள்ஸ்பூன் கடலை மாவு, கால் கப் தயிர், புதினா இலை கொஞ்சம், கொத்தமல்லி கொஞ்சம் போட்டு நல்லா மைய அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.  

அடுத்து ஒரு கடாயை சூடுபடுத்தி, 1 டீஸ்பூன் எண்ணெய், 1 டீஸ்பூன் நெய் சேர்த்து, சூடானதும் ஏலக்காய் 2, 1 பட்டை, 1 இலை, 1 டீஸ்பூன் சீரகம், காஷ்மீரி மிளகாய் தூள் 1 டீஸ்பூன் போடுங்கள். 1 கப் சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிப் போடுங்கள். இதனுடன் 1 டீஸ்பூன் அளவு உப்பு போடுங்கள். ஸ்டவ்வை மிதமான தீயில் வைத்துக்கொண்டு வெங்காயத்தை வதக்குங்கள். வதங்கியதும், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் மல்லிதூள், 1 டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றாகக் கலந்து விடுங்கள். இதனுடன் அரைத்து வைத்த மசாலைவை சேர்த்துக்கொள்ளுங்கள். பச்சை வாசனை போகிற வரைக்கும் வேகவையுங்கள், நல்லா கலந்துவிட்ட் பிறகு மூடி போட்டு மூடி வையுங்கள். எண்ணெய் பிரிந்து வர வரைக்கும் காத்திருங்கள். கலந்துவிடுங்கள். 

Advertisment
Advertisements

இப்போது, இதில் காலிபிளவரை போட்டு கலந்துவிடுங்கள். கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றாகக் கலந்துவிடுங்கள். பிறகு மூடி போட்டு மூடி வையுங்கள். எண்ணெய் பிரிந்து வர வரைக்கும் காத்திருங்கள். கொதித்து திக் ஆனதும் காலிபிளவர் மசாலா தயார்.

தால் ஃபிரை

அரை கப் துவரம் பருப்பு நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் பாசிப்பருப்பு ரெண்டும் மிக்ஸ் பண்ணி கூட எடுக்கலாம், ரொம்ப கெட்டியா வேண்டும் என்றால் பாதி அளவு பாசிப்பருப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். அது நல்ல கெட்டி தன்மை கொடுக்கும். இங்கே துவரம் பருப்பு மட்டும் தான் எடுத்து இருக்கிறோம். ஒரு டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துவிட்டு, ஒரு கால் டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள். இது கூட 1 1/2 கப் அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். அரை கப் அளவு பருப்புக்கு 1 1/2 கப் தண்ணீர் சரியா இருக்கும். இப்ப குக்கர் மூடி போட்டு மூடிவிட்டு அதிக தீயில் வைத்து ஒரு 5 விசில் வரைக்கும் வேக வைத்து எடுத்து, ஒரு ஓரமா வைத்துக்கொள்ளுங்கள். 

ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய், ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துவிட்டு, சூடானதுக்கு பிறகு, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்துக்கொள்ளுங்க்ள், ஸ்டவ்வை குறைவான தீயில் வைத்துக்கொள்ளுங்கள். சீரகம் நல்லா பொரிஞ்சதுக்கு அப்புறம் கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது இதுல ஒரு டேபிள் ஸ்பூன் பொடியா கட் பண்ணிய பூண்டு சேர்த்துக்கொண்டு, ஒரு கால் டேபிள் ஸ்பூன் அளவுக்கு பொடியா கட் பண்ணின இஞ்சி, 2 பச்சை மிளகாய் பொடியா கட் பண்ணி போடுங்கள். இது கூடவே ரெண்டு வரமிளகாயை கிள்ளி சேர்த்துக்கொள்ளுங்கள். இது நல்லா மிக்ஸ் பண்ணிவிடுங்க, இஞ்சி பூண்டோட பச்சை வாசனை போற வரைக்கும் நல்லா மிக்ஸ் பண்ணதுக்கு அப்புறமா ஒரு கப் அளவுக்கு பொடியா கட் பண்ணின வெங்காயம் சேர்த்துட்டு கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து நல்லா வதக்கிக்கொள்ளுங்கள். உப்பு சேர்த்து வதக்கும்போது வெங்காயம் சீக்கிரமாவே வதங்கிவிடும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வரட்டும் அதுவரைக்கும் நம்ம வதக்கி எடுத்துக்கலாம். வெங்காயம் நல்லா வதங்குனதுக்கு அப்புறமா இது கூட பொடியா கட் பண்ணின தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள். ஒரு பெரிய சைஸ் வெங்காயம் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு மீடியம் சைஸ் தக்காளி கட் பண்ணி நல்லா மிக்ஸ் பண்ணதுக்கு அப்புறமா இது கூட ஒரு கால் டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளுங்க.  இது கூடவே ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் சேர்த்துக்கோங்க நான் வந்து காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த மிளகாய் தூள் காரம் கம்மியா இருக்கும். அப்ப சாம்பார் இந்த மாதிரி தால் போன்ற ரெசிபிக்கு நம்ம யூஸ் பண்ணும்போது காரம் ரொம்ப கம்மியா இருக்கும். அப்ப டேஸ்டும் ரொம்ப அதிகமா இருக்கும். இந்த மசாலாவோட பச்சை வாசனை போறது வரைக்கும் நல்லா வதக்கிக்கொள்ளுங்கள்.

மசாலா உங்களுக்கு அதிகம் அடி பிடிக்கிற மாதிரி தெரிந்தது என்றால் ஒரு கால் கப் அளவு மட்டும் தண்ணி சேர்த்துவிட்டு நல்லா மிக்ஸ் பண்ணிட்டு மூடி போட்டு மூடிவிட்டு நல்லா தக்காளி முழுமையா வதங்கி வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க. இப்போது தக்காளி முழுமையா வதங்கிவிட்டது. தக்காளி நல்லா வதங்குனதுக்கு அப்புறமா நம்ம ஏற்கனவே வேகவைத்த பருப்பை அந்த தண்ணியோடவே சேர்த்துக்கொள்ளுங்கள். முடிந்த அளவு மசிச்சிட்டு சேருங்கள். நீங்க கரண்டி வைத்து கூட மசிச்சு விடலாம் பருப்பு சேர்த்ததுக்கு அப்புறமா அது கூடவே தண்ணி சேர்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பருப்பு கன்சிஸ்டன்ஸி எவ்வளவு இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு நீங்கள் தண்ணீர் சேர்த்துக்கலாம். அதனல, ரெண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது இதை நல்லா மிக்ஸ் பண்ணிட்டு இது நல்லா கொதிக்க வச்சுக்கோங்க ஒரு கொதி வந்ததுக்கு அப்புறமா ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகளை கட் பண்ணிட்டு இதுபோல சேர்த்துவிடுங்கள். கொத்தமல்லி இலைகள் வந்து நல்ல வாசனை கொடுக்கும் இந்த ரெசிபிக்கு. இப்ப பாருங்க பருப்பு நல்லா கொதிக்க ஆரம்பிச்சிருச்சு, இந்த ஸ்டேஜ்ல அப்படியே ஹை ஃப்ளேம்ல வச்சுட்டு ஒரு மூணுல இருந்து நாலு நிமிஷத்துக்கு நல்லா கொதிக்க வச்சுக்கோங்க. அதுக்கு அப்புறம் நீங்க ஸ்டவ் ஆஃப் பண்ணிட்டு, பருப்பு சூப்பரா தயாரித்து ஆகிவிட்டது.

இதுக்கு நம்ம தடுக் ரெடி பண்ண வேண்டும், நீங்க எப்ப இந்த தால வந்து பரிமாறப் போறீங்களோ அந்த ஸ்டேஜ்ல இந்த தாளுக்கு மேல நம்ம செய்ய போற தடுக்க பண்ணலாம். நீங்க கொஞ்சமா ஊத்திட்டு அதுக்கு அப்புறமா பரிமாறுங்கள். ஒரு தடுக்கா பான்ல ஒரு டீஸ்பூன் எண்ணெய், ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளுங்கள். சூடானதுக்கு அப்புறமா கொஞ்சமா சீரகம் சேர்த்துவிட்டு, ஒரு நாலஞ்சு பல் பூண்ட கட் பண்ணி இதுபோல சேர்த்துக்கோங்க, முடிஞ்ச அளவு இந்த பூண்டை வந்து மெல்லியதா நல்லா ஸ்லைஸ் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க. இது நல்லா மொறுமொறுப்பா வர வரைக்கும் இதுபோல எண்ணெயிலேயே வதங்க விடுங்க. பூண்டு நல்லா கிரிஸ்பியானதுக்கு அப்புறமா ஒரு வரமிளகாய் சேர்த்துக்கோங்க. பூண்டோட கலர் நல்லா சேஞ்ச் ஆகும் உங்களுக்கு பார்த்தாலே தெரியும் மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். அரை டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். ஸ்டவ்வை ஆஃப் பண்ணுங்கள். கொத்தமல்லி கொஞ்சம் போட்டு தனியா எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஜீரா ரைஸ் செய்வது எப்படி?

ஜீரா ரை செய்ய முதலில் ஒரு கடாய் எடுத்து வையுங்கள். ஸ்டவ்வை லோ ஃபிளேமில் வையுங்கள். அதில் 1 டீஸ்புன் நெய் ஊற்றுங்கள். 2 பிரிஞ்சி இலை, 1 பட்டை, 2 ஏலக்காய், 3 கிராம்பு, 1 டீஸ்பூன் சீரகம் சேருங்கள்.  ஜீரோ ரைஸ் அப்படின்றதுனால சீரகத்தோட வாசன அதிகமாக இருக்கணும். அதனால, சீரகம் நீங்க கொஞ்சம் அதிகமாவே சேர்த்துக்கோங்க. இப்ப இதுல ஒரு கொத்து கருவேப்பிலை இரண்டு பச்சை மிளகாய் கீறி போட்டு சேர்த்துக்கோங்க, ரெண்டு வரமிளகாய் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது, இதை நல்லா மிக்ஸ் பண்ணிவிடுங்கள். ஸ்டவ் லோ பிளேம்லே இருக்கட்டும். இந்த மாதிரி நம்ம நார்மலா எப்படி சாதம் வடிப்போமோ அதே மாதிரி வடிச்சுக்கலாம். வடிச்சு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். பைனலா இதுல கொஞ்சமா கொத்தமல்லி இலை தூவி விட்டு மிக்ஸ் பண்ணிட்டு வந்து பரிமாறலாம். இந்த ஜீரா ரைஸ் சூப்பரா இருக்கும் அவ்வளவுதான் ரொம்ப ரொம்ப டேஸ்ட்டியான ஜீரா ரைஸ், காலி பிளவர் மசாலா,  தால் ஃப்ரை, வெங்காயம், தக்காளி, பழம் வைத்துக்கொண்டால் சூப்பரான லஞ்ச் பாக்ஸ் உணவு தயார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: