தயிர் சாதம் சுவையாகவும் டிபன் பாக்ஸ் காலியாகும் மாதிரியும் எப்படி செய்வது என்று பார்ப்போம். வெறும் தயிர் மட்டும் இல்லாமல் அதனுடன் சில பழங்களையும் சேர்க்கலாம்.
தயிர் சாதம் சுவையாகவும் டிபன் பாக்ஸ் காலியாகும் மாதிரியும் எப்படி செய்வது என்று பார்ப்போம். வெறும் தயிர் மட்டும் இல்லாமல் அதனுடன் சில பழங்களையும் சேர்க்கலாம்.
வெயிலுக்கு சுவையா குழுகுழுன்னு ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெஸிபி எப்படி செய்வது என்று பார்ப்போம். கொழகொழன்னு ருசியான தயிர் சாதம் செய்வது பற்றி ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
தயிர் பால் - 1 கப் காய்ச்சி ஆற வைத்தது உப்பு இஞ்சி பச்சை மிளகாய் கேரட் மாதுளைப்பழம் கொத்தமல்லி இலை எண்ணெய் உளுத்தம் பருப்பு கடுகு பெருங்காய தூள் கறிவேப்பிலை சின்ன வெங்காயம்
செய்முறை:
Advertisment
Advertisements
சமைத்த அரிசியை மசித்து, அதில் காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்க்கவும். நன்றாக கலந்து 5 நிமிடம் ஊற வைக்கவும்.
பின்பு கெட்டியான தயிர் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். அதில் உப்பு, நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய கேரட், மாதுளைப்பழம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும், உளுத்தம் பருப்பு, கடுகு சேர்த்து நன்கு கலந்து விடவும். அடுப்பை அணைத்து அதில் , கறிவேப்பிலை, பெருங்காய தூள், வெங்காயம் சேர்க்கவும்.
பின்பு தாளிப்பை தயிர் சாதத்துடன் சேர்த்து நன்றாக கலக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும். துருவிய கேரட் மற்றும் மாதுளைப்பழம் சேர்க்கலாம். சுவை மற்றும் சத்தாகவும் இருக்கும் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.