ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே ஈஸியாக முட்டை சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். தினமும் ஒரே மாதிரி சமைத்து கொடுக்காமல் வெவ்வேறு லஞ்ச் பாக்ஸ் ரெஸிபி இனி செய்து கொடுங்கள். இந்த முறையில் செய்து கொடுத்தால் முட்டை பிடிக்காத குழந்தைகள் கூட அதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவையான முட்டை சாதம் அதுவும் ஆந்திரா ஸ்டைலில் செய்வது பற்றி ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டி இருப்பதாவது,
தேவையான பொருட்கள்
மிளகு
சீரகம்
சோம்பு
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
பாஸ்மதி அரிசி
முட்டை
எண்ணெய்
பூண்டு
பச்சை மிளகாய்
வெங்காயம்
கறிவேப்பிலை
தக்காளி
உப்பு
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
வெங்காயத்தாள்
செய்முறை
கடாயில் மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு ஏலக்காய் சேர்த்து வறுத்து நன்கு பொடியாக அரைக்கவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு மெல்லிசாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்துவிடவும். அரைத்த மசாலாத்தூளை சிறிதளவு சேர்த்து கலந்துவிடவும். பின்பு மசாலாவை கடாயில் ஒரு பக்கமாக நகர்த்தி, பிறகு எண்ணெய் ஊற்றி அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
லஞ்ச் காம்போ ரெசிப்பீஸ் | Lunch Combo Recipes In Tamil | Egg Rice | Chilli Chicken
உப்பு,மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கடாயை மூடி மிதமான தீயில் 1 நிமிடம் வேகவிடவும். பின்பு மெதுவாக கலந்துவிட்டு கடாயை மூடி 2 நிமிடம் வேகவிடவும். பிறகு அரைத்த மசாலா தூளை சேர்த்து கலந்துவிடவும்.
கடைசியாக வேகவைத்த பாஸ்மதி அரிசி மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கினால் போதும் டேஸ்டியான முட்டை சாதம் ரெடியாகிவிடும்.