குழந்தைகளுக்கு என்ன லஞ்ச் செய்து கொடுப்பது என்று யோசிக்கும் தாய்மார்கள் இனி இந்த ஒரு சாதத்தை வாரத்தில் ஒருமுறையாவது செய்து கொடுங்கள்.
சுவையான சத்தான் கொத்தமல்லி சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சை மிள்காய்
பூண்டு
கொத்தமல்லி
எண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
கருவேப்பிலை
வெங்காயம்
உப்பு
சாதம்
செய்முறை
ஒரு மிக்ஸியில் பச்சை மிளகாய்,பூண்டு, கொத்தமல்லி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து அதில் சிறிது கருவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் உப்பு போட்டு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரை வதக்கி அதில் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறி எடுத்தால் போதும் கொத்தமல்லி சாதம் ரெடி ஆகிவிடும்.
இத்தனை நாளா தெரியாம போச்சேன்னு நினைப்பீங்க|Lunchக்கு கொத்தமல்லி சாதம்,உருளைக்கிழங்கு வறுவல்|Lunch
உருளைக்கிழங்கு வறுவல்
தேவையான பொருட்கள்
கரம் மசாலா
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
உப்பு
இஞ்சி பூண்டு பேஸ்ட்
எண்ணெய்
கடுகு
உருளைக்கிழங்கு
செய்முறை
ஒரு பவுலில் கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது எண்ணெய் சேர்த்து கலந்து விடவும். இந்த மசாலாக்களை நன்றாக கலந்து அதில் வட்ட வட்டமாக நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து ஒரு பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் சிறிது கடுகு சேர்த்து பொறிந்ததும் ஊற வைத்துள்ள உருளைக்கிழங்கையும் சேர்த்து வறுத்து எடுக்கவும். பின்னர் நன்கு வதங்கி மொருமொரு என்ற பதத்தில் வந்ததும் இறக்கி பரிமாற ஆரம்பிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“