லஞ்ச் பாக்ஸ் ரெசிபி: வெறும் 10 நிமிசம் போதும்... இப்படி அட்டகாசமாக ரெடி பண்ணுங்க!

வெறும் 10 நிமிடத்தில் பிள்ளைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி எப்படி செய்து கொடுப்பது என்று பார்ப்போம்.

வெறும் 10 நிமிடத்தில் பிள்ளைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி எப்படி செய்து கொடுப்பது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
பேபி கார்ன் புலாவ்.. சிம்பிள், சுவையான லஞ்ச் ரெசிபி இதோ!

ஒன்பாட் ரெஸிபி பிள்ளைகளுக்கு பிடித்த் மாதிரி அதுவும் சட்டுன்னு சமையலை முடிக்க உகந்த மாதிரி ஒரு ரெஸிபி எப்படி செய்வது என்று ஷெரீன்ஸ் கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். இந்த மாதிரி செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

Advertisment

தேவையான பொருட்கள்:

 எண்ணெய்
  பட்டை
 கிராம்பு
 ஏலக்காய்
 அன்னாசிப்பூ
 பிரியாணி இலை
 பெரிய வெங்காயம்
 புதினா இலை
 கொத்தமல்லி இலை
 பச்சை மிளகாய்
 ஸ்பூன் தயிர்
 ஒரு தக்காளி
 இஞ்சி பூண்டு விழுது
  கரம் மசாலா
 ஊறவைத்த பச்சை பட்டாணி
 உருளைக்கிழங்கு
 எலுமிச்சை
 உப்பு
 அரிசி

செய்முறை:

Advertisment
Advertisements

குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ மற்றும் பிரியாணி இலை சேர்த்து பொரிய விடவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும். புதினா, மல்லி, பச்சை மிளகாய் மற்றும் தயிர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். அரைத்த விழுது மற்றும் கரம் மசாலா சேர்த்து கலக்கவும். பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அரிசி மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு அணைக்கவும். அவ்வளவு தான் ஒன்பாட் ரைஸ் ரெடி. 

Lunch Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: