எப்போதுமே சாதம் மீதியாகி விடுகிறது என்ன செய்வது என்று தெரியாமல் கீழே கொட்டி விடுகிறீர்களா? ஆனால் இனி அந்த தவறை செய்யாதீர்கள். மீதமாகும் சாதத்தை வைத்து ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெஸிபி டக்குனு செய்து விடலாம். மீதமான சாதத்தை வைத்து டேஸ்டியான வெங்காய சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சாதம்
வெங்காயம்
உப்பு
கறிவேப்பிலை
கடுகு
சீரகம்
சோம்பு
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
எண்ணெய்
பச்சை மிளகாய்
கொத்தமல்லி தூள்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு பொறிந்து வந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விடவும்.
Onion rice
நன்கு வதங்கியதும் அதில் மிளகாய் தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி விடவும். பச்சை வாசம் நீங்கியதும் அதில் சிறிது கருவேப்பிலை சேர்த்து வதக்கி வடித்த சாதத்தை சேர்த்து கிளறினால் வெங்காய சாதம் ரெடி ஆகிவிடும். இதனை அப்பளம் அல்லது வத்தலுடன் சேர்த்து சாப்பிடும்போது அவ்வளவு சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“