லஞ்ச் பாக்ஸ் ரெஸிபி: புரதச்சத்து நிறைந்த கொண்டைக்கடலை தம் பிரியாணி

புரதச்சத்து நிறைந்த ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெஸிபியை இனி உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு செய்து கொடுங்கள்.

புரதச்சத்து நிறைந்த ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெஸிபியை இனி உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு செய்து கொடுங்கள்.

author-image
WebDesk
New Update
கொண்டைக்கடலை சாதம்

கொண்டைக்கடலை சாதம்

புரதம் நிறைந்த கொண்டைக்கடலையை வைத்து சுவையான ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெஸிபி எப்படி செய்வது என்று பார்ப்போம். கொண்டைக்கடலையை வைத்து சுவையான தம் பிரியாணி செய்வது பற்றி ஹோம்குக்கிங் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டி இருப்பதாவது, 

Advertisment

தேவையான பொருட்கள்

எண்ணெய் 
வெங்காயம்
காஷ்மீரி மிளகாய் தூள்  
உப்பு  
உருளைக்கிழங்கு  
பாஸ்மதி அரிசி                                                     
பட்டை
கிராம்பு 
பிரியாணி இலை 
ஏலக்காய்  
அன்னாசி பூ 
உப்பு 
கொண்டைக்கடலை  
நெய் 
பச்சை மிளகாய் 
இஞ்சி பூண்டு விழுது 
தக்காளி 
மஞ்சள் தூள்
சீரகத்தூள்
கரம் மசாலா
தயிர்
புதினா 
கொத்துமல்லி தழை
கொண்டைக்கடலை மசாலா 

செய்முறை

Advertisment
Advertisements

முதலில் பாசுமதி அரிசியை தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். அடுத்து கொண்டைக்கடலையுடன் தண்ணீர் சேர்த்து எட்டு மணி நேரம் ஊறவைக்கவும். 

ஊறவைத்த கொண்டைக்கடலையை குக்கரில் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேகவைக்கவும். அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக பொரித்து வைத்துக்கொள்ளவும். 

அடுத்து ஒரு கடாயில் எண்ணெய், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் கலந்து பின்பு வேகவைத்த உருளைக்கிழங்குகளை சேர்த்து வறுக்கவும். அரிசியை சமைக்க ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர்  ஊற்றி கொதிக்க வைக்கவும்.

கொண்டைக்கடலை தம் பிரியாணி | Kabuli Chana Biryani Recipe in Tamil

பின்பு இதனுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரிசியை முக்கால் வேக்காட்டிற்கு வேகவைத்துக்கொள்ளவும். 

கொண்டைக்கடலை மசாலா தயாரிக்க ஒரு கடாயில் நெய், எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

அடுத்து இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், உப்பு, தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இதில் வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு கொதிக்கவிடவும். 

இறுதியாக புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும். அடுத்ததாக பிரியாணி செய்ய ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலை மசாலா, வேகவைத்த பாசுமதி அரிசி, வறுத்த உருளைக்கிழங்கு, வறுத்த வெங்காயம், நெய் சேர்த்து அந்த பாத்திரத்தை இருக்கமாக மூடி பதினைந்து நிமிடத்திக்கு வேகவைக்கவும்.

பின்னர் ஆவி அடங்கியதும் எடுத்து பரிமாறினால் சுவையான கொண்டைக்கடலை தம் பிரியாணி ரெடியாகிவிடும். இதற்கு தயிர் பச்சடி, குருமா சுவையாக இருக்கும்.

Briyani Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: