குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருக்கிறீர்களா? ஒரு நாளைக்கு வாழைக்காய் பொடி சாதம் செய்து கொடுங்கள். அதுவும் செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் செய்து கொடுங்கள்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
உளுத்தம் பருப்பு
துவரம் பருப்பு
உப்பு
காய்ந்த மிளகாய்
வாழைக்காய்
கடுகு
சாதம்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து அடிப்பிடிக்காமல் வறுக்கவும். பின்னர் அதில் உள்ள எண்ணையை வடித்து வெறும் பருப்பு மட்டும் எடுத்து தனியாக வைக்கவும்.
பின்னர் அதே எண்ணெயில் வர மிளகாய் போட்டு வறுக்கவும். அதில் சிறிது கருவேப்பிலையும் சேர்த்து மொருமொருப்பாக வறுத்துக் கொள்ளவும். அடுப்பை அணைத்துவிட்டு அதில் பெருங்காயத் துளை சேர்த்து அந்த சூட்டிலேயே சிறிது வதக்கி பருப்புடன் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பின் வாழைக்காய் மேலே சிறிது எண்ணெய் தடவி தீயில் லேசாக வாட்டி எடுத்து தோலை உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் வறுத்து வைத்ததை ஒரு மிக்ஸி ஜாரில் அரைத்து இந்த வாழைக்காயுடன் சேர்த்து நன்கு பிசைந்து எடுக்க வேண்டும்.
Vazhaikkai podi Sadam | variety rice | lunch box special | bachelor cooking | Chef Venkatesh Bhat
பின்னர் ஒரு கடாயில் நெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து அந்த வாழைக்காய் கலவையை சேர்த்து பேஸ்ட் மாதிரி ஆக்க வேண்டும். அதில் வடித்து வைத்துள்ள சாதத்தை கொட்டி கிளறினால் வாழைக்காய் பொடி சாதம் ரெடி ஆகிவிடும்.