சுவையான தக்காளி சாதம் வெறும் 3 தக்காளி வைத்து எப்படி செய்வது என்று பார்ப்போம். லஞ்ச் பாக்ஸ்க்கு ஈஸியான ஒரு டிஷ் காலையில் சீக்கிரம் செய்து விடலாம். இதை எப்படி செய்வது என்று மாம் ஆஃப் பாய்ஸ் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை
பச்சை மிளகாய்
வெங்காயம்
இஞ்சி பூண்டு விழுது
தக்காளி
உப்பு
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
மல்லி தூள்
குழம்பு மிளகாய் பொடி
சாதம் (வடித்தது)
கொத்தமல்லி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி, மூடி போட்டு 3 நிமிடம் குறைந்த தீயில் வேக விடவும். மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் குழம்பு மிளகாய் பொடி சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
வடித்த சாதத்தை சேர்த்து, மசாலாவுடன் நன்கு கலக்கும் வரை கிளறவும். இறுதியாக, கொத்தமல்லி இலைகளை தூவி, மூடி போட்டு 5 நிமிடம் டிஸ்டர்ப் செய்யாமல் வைக்கவும். பின்னர் திறந்து பார்த்தால் கமகமன்னு இப்போது சுவையான தக்காளி சாதம் தயார்.