கீரையை சாப்பிடாதவர்களுக்கு பிடித்த மாதிரி கீரை சாதம் எப்படி செய்வது என்று அம்மா சமையல் வீடியோஸ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி மிளகு சீரகம் வெந்தயம் காய்ந்த மிளகாய் நெய் எண்ணெய் கடலைப்பருப்பு உளுந்து சீரகம் கடுகு மஞ்சள் தூள் உப்பு வெங்காயம் தக்காளி
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு கடாயில் மல்லி மிளகு, சீரகம், வெந்தயம் சேர்த்து வறுக்கவும். சிவந்து வரும் போது காய்ந்த மிளகாய் சேர்த்து ஆறவைத்து பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் நெய், எண்ணெய் சேர்த்து கடலைப்பருப்பு, உளுந்து, சீரகம், கடுகு ஆகியவற்றை சேர்த்து சிவக்க விடவும்.
பின்னர் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் நறுக்கிய பூண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.
இவை அனைத்தும் அடங்கியதும் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்.
பின்னர் மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள பொடி, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கீரையை எடுத்து பொடியாக நறுக்கி இதில் சேர்க்கவும்.
இவற்றை நன்கு கலந்து சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும். மிதமான சூட்டில் அடுப்பை வைத்து கீரை சேர்த்து வெந்ததும் அதில் வடித்து வைத்துள்ள சாதம் அப்புறம் தயார் செய்த பொடி சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான கீரை சாதம் ரெடி ஆகிவிடும்.