லஞ்ச் பாக்ஸ் ரெசிபி: ஸ்கூலுக்கு கிளம்புற கேப்ல ரெடி பண்ணலாம்... குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!

பள்ளி செல்லும் பிள்ளைகளுக்காக என்ன சமைத்து கொடுக்கலாம் என யோசிக்கும் பெற்றோர்கள் இந்த மாதிரி டிஷ்களை ட்ரை பண்ணுங்கள்.

பள்ளி செல்லும் பிள்ளைகளுக்காக என்ன சமைத்து கொடுக்கலாம் என யோசிக்கும் பெற்றோர்கள் இந்த மாதிரி டிஷ்களை ட்ரை பண்ணுங்கள்.

author-image
WebDesk
New Update
இப்படி வெரைட்டியா செய்தா யாருக்குப் புடிக்காது? ஸ்பெஷல் தக்காளி சாதம்

பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக ஈஸியான மற்றும் சுவையான ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம். டீக்கடை கிச்சன் வழங்கும் இந்த எளிய மற்றும் சுவையான குடமிளகாய் சாதம் ரெசிபி, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு சிறந்த மதிய உணவு ஆகும்.

Advertisment

தேவையான பொருட்கள்:

அரிசி
கொத்தமல்லி 
புதினா
எண்ணெய்  
உப்பு
வெங்காயம்
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது
குடமிளகாய்
வல்லாரை கீரை
தக்காளி
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
மிளகு தூள்
சீரக தூள்
மல்லி தூள்

செய்முறை:

Advertisment
Advertisements

அரிசியை நன்கு கழுவி 5 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் தண்ணீர், கொத்தமல்லி, புதினா, எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். ஊற வைத்த அரிசியை சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். குடமிளகாய் சேர்த்து வதக்கவும். வல்லாரை கீரை சேர்த்து வதக்கவும். அரைத்த தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், சீரக தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும்.
50ml தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

வெந்த சாதத்தை மசாலாவுடன் கலந்து பரிமாறவும். இந்த ரெசிபியில், வல்லாரை கீரை சேர்க்கப்பட்டுள்ளது, இது குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்.

Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: