மக்ரூனை நாம் வீட்டில் செய்ய முடியும். ரொம்ப ஈசியான ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
அரை கப் – சர்க்கரை
1 கப் முந்திரி
3 முட்டை
உப்பு கால் டீ ஸ்பூன்
1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
செய்முறை: அரை கப் சர்க்கரையை அரைத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து 1 கப் முந்திரியை நாம் அரைத்து எடுக்க வேண்டும். முட்டையின் வெள்ளைக் கருவை நாம் எடுத்துகொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். பீட்டர் வைத்து அடித்துகொள்ளுங்கள். அதில் பவுடர் செய்த சர்க்கரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிட்டரில் பீட் செய்ய வேண்டும். கால் டீஸ்பூன் உப்பு , வெண்ணிலா எசன்ஸ் 1 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும். தற்போது ஒரு ஸ்பூன் வைத்து மெதுவாக கிளர வேண்டும். வீட்டில் உள்ள மைக்ரோவேவ் ஓவனை 10 நிமிடங்கள் சுடு செய்ய வேண்டும். மைக்ரூன் பேஸ்டை சிறிய பிளாஸ்டிக் கவரில் வைத்து அடியில் ஓட்டை போட்டு அதை மக்ரூன் போல் புழிந்துகொள்ள வேண்டும். இதை நாம் ஓவன் வைக்கும் டிரேவில் செய்ய வேண்டும். 120 டிகிரி-க்கு குறைவாக வைத்து 1 மணி நேரம் 30 நிமிடங்கள் கழித்து வெளியே எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“