நம்முடைய அன்றாட உணவுகளுடன் ரசம் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அற்புத ரசம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஜுரம், சளி, கபம் போன்ற பிரச்சனைகள் அண்ட விடாமல் விரட்டவும் உதவுகிறது.
ரசத்தில் நாம் மிளகு சேர்ப்பதால், அவை இருமல், தலை சுற்றல் போன்ற பாக்டீரியாவால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் சுவாசப் பிரச்சினைகளுக்கு சிறந்த மூலிகை மருந்தாகவும் செயல்படுகிறது. இப்படி ஏராளமான பயன்களை கொண்டுள்ள ரசத்தை மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மிளகு
மல்லி விதை
வர மிளகாய்
சின்ன வெங்காயம்
தக்காளி
புளி
உப்பு
மல்லி இலை
கடுகு
எண்ணெய்
பெருங்காயம்
பச்சை மிளகாய்
பூண்டு
கருவேப்பிலை
செய்முறை
முதலில் மிக்சி எடுத்து அதில் மிளகு, மல்லி விதை, வர மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைக்கவும். இதன்பிறகு, ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் விட்டு காய விடவும்.
பின்னர், கடுகு போட்டு பொரிந்ததும் அதனுடன் பெருங்காயம், கீறிய 2 பச்சை மிளகாய், நசுக்கிய 4 பூண்டு, கருவேப்பில்லையை சேர்க்கவும்.
இதன்பின்னர், அவற்றுடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கவும். அதில் இருக்கும் பச்சை வாடை விலகியதும் அவற்றுடன் புளி தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
தக்காளி ரசம் Madhampatty Rangaraj favourite dish
கொதிக்கும் முன் கொத்தமல்லி இலையை போட்டு கீழே இறக்கினால் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல் ரசம் தயார்.