மாதம்பட்டி ரங்கராஜின் திருமண விருந்தில் இந்த ஐந்தரிசி பொங்கம். இப்படி செய்துபாருங்க.
தேவையான பொருட்கள்
அரை கப் பச்சரிசி
கால் கப் பாசி பருப்பு
கால் கப் ஜவ்வரிசி
கால் கப் ரவை
கால் கப் சேமியா
1 ஸ்பூன் மிளகு பொடித்தது
1 ஸ்பூன் சீரகம் பொடித்தது
ஒரு துண்டு இஞ்சி
2 பச்சை மிளகாய்
தேங்காய் பால் கால் கப்
6 கப் தண்ணீர்
3 ஸ்பூன் நெய்
8 முந்திரி
அரை ஸ்பூன் பெருங்காயம்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அரிசி, பாசி பருப்பை சேர்க்கவும். தொடர்ந்து ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்க்கவும். இதை நன்றாக வேக வைக்கவும். வெந்ததும், சேமியா, ரவையை சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். தொடர்ந்து உப்பு சேர்க்கவும். இனியொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைக்கவும். நெய் சேர்க்கவும், 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். இதுல் இஞ்சி , பச்சை மிளகாய், முந்திரி பருப்பு, கருவெப்பிலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து வதக்கவும். தொடர்ந்து பொடித்த மிளகு, சீரகம் , பெருங்காயம் சேர்த்து கிளரவும். இதை நாம் பொங்கலில் சேர்க்கவும். தொடர்ந்து தேங்காய் பால் சேர்த்து கிளரவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“