இந்த வெள்ளை பணியாரத்தை மறக்காம வீட்டில் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும். மாதம்பட்டி ரங்கராஜ் ரெசிபி
தேவையான பொருட்கள்
மாவு பச்சரிசி 1 கப்
அரை கப் உளுந்து
உப்பு
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை சேர்த்து, அதில் உளுந்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து கொஞ்சம் உப்பு சேர்த்து அரைத்துகொள்ளவும். குழி கரண்டி நிரம்ப மாவை எடுத்து எண்ணெய்யில் விட்டு உப்பு வரும் வரை பொறிக்க வேண்டும். இந்த செட்டி நாடு ஸ்பெஷல் வெள்ளை பணியாரத்தை காரச் சட்னியுடன் சாப்பிடலாம்.
காரச் சட்னி ரெசிபி
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 3
பூண்டு - 8 பல்
வர மிளகாய் - 4
காஷ்மீரி மிளகாய் - 3
புளி - சிறிதளவு
உப்பு - தேவையானஅளவு
வெல்லம் - 2 சிறிய துண்டு
தாளிக்க தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, வரமிளகாய், காஷ்மீரி மிளகாய், புளி, வெல்லம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ளவும். அடுத்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். இப்போது இதை அரைத்த சட்னியை சேர்த்து கிளறி, மூடி வைத்தபின் பரிமாறினால் சுவையான மதுரை ஸ்டைல் கார சட்னி ரெடி.