மாதம்பட்டி ரங்கராஜின் அசத்தல் ரெசிபி, இந்த நெய் மணக்கும் கார தோசை. இதை வீட்டில் ஈசியா செய்யலாம்.
தேவையான பொருட்கள்
3 ஸ்பூன் எண்ணெய்
அரை ஸ்பூன் கடுகு
அரை ஸ்பூன் சீரகம்
1 கொத்து கருவேப்பிலை
10 பூண்டு நறுக்கியது
20 சின்ன வெங்காயம்
3 தக்காளி அரைத்தது
1 ஸ்பூன் மிளகாய் பொடி
அரை ஸ்பூன் மல்லிப் பொடி
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
கால் ஸ்பூன் சீரகப் பொடி
தோசை மாவு 2 கப்
2 ஸ்பூன் நெய்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, சீரகம் சேர்த்து கிளரவும். கருவேப்பிலை சேர்க்கவும். சின்ன வெங்கயாத்தை சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரை வதக்கவும். இதில் அரைத்த தக்காளியை சேர்த்து கிளரவும். தொடர்ந்து மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, சீரகப் பொடி, மல்லிப் பொடி சேர்த்து கிளரவும். வழக்கம் போல் தோசை போட்டு அதற்கு மேல் இதைவைத்து பரப்ப வேண்டும். நெய் சேர்த்து மொறு மொறு வென்று சுட்டு எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“