ஒரு முறை வீட்டில் ஆடு எலும்பு ரசத்தை, மாதம்பட்டி ரங்கராஜ் சொல்வது போல் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
1 ஸ்பூன் எண்ணெய்
1 ½ ஸ்பூன் மிளகு
அரை ஸ்பூன் சிரகம்
4 பூண்டு
1 ஸ்பூன் மல்லி
1 கொத்து கருவேப்பிலை
2 பச்சை மிளகாய்
10 சின்ன வெங்காயம்
1 தக்காளி
ஆட்டு எலும்பு அரை கிலோ
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
அரை ஸ்பூன் மஞ்சள் பொடி
2 கப் தண்ணீர்
உப்பு
செய்முறை : குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் மிளகு, சீரகம், பூண்டு, கருவேப்பிலை, மல்லி சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியதும் இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். அதே எண்ணெய்யில் பச்சை மிளகாய், பூண்டு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளரவும். ஆட்டின் எலும்பை சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து கொள்ளவும். மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து தண்ணீரை சேர்த்து குக்கரை மூடி 7 விசில் விட்டு எடுக்கவும். மிளகு, சீரகம் கலவையை அரைத்துகொள்ளவும். இதை குக்கரை திறந்து அடிப்பில் வைத்து அதில் சேர்க்கவும். நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“