வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்ய முடியும் , இந்த மட்டன் குழம்பு ரெசிபியை மாதம்பட்டி ரங்கராஜ் சொல்வது போல் செய்யுங்க
தேவையான பொருட்கள்
அரை கிலோ மட்டன்
3 ஸ்பூன் எண்ணெய்
3 கிராம்பு, பிரியாணி இலை
1 ஸ்பூன் சீரகம்
200 கிராம் சின்ன வெங்காயம் நறுக்கியது
1 ஸ்பூன் இஞ்சி பூணடு பேஸ்ட்
1 கொத்து கருவேப்பிலை
2 தக்காளி நறுக்கியது
1 ஸ்பூன் மிளகாய் பொடி
1 ½ ஸ்பூன் மல்லிப்போடி
சீரகத்தூள் கொஞ்சம்
கரம் மசலா கொஞ்சம்
அரை ஸ்பூன் மிளகு தூள்
2 கப் தண்ணீர்
உப்பு
செய்முறை : மட்டனை நன்றாக கழுவ வேண்டும். ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து கிராம்பு, பட்டை,பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் சீரகம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து சின்ன வெங்காயம் நறுக்கியதை சேர்த்து கிளரவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளரவும். கருவேப்பிலை சேர்க்கவும். தொடர்ந்து இதில் தக்காளி நறுக்கியது சேர்க்கவும். தொடர்ந்து மட்டன் சேர்த்து நன்றாக கிளரவும். இதில். மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து கிளரவும். தொடர்ந்து மிளகு தூள் சேர்த்து கிளரவும். தண்ணீர், உப்பு சேர்த்து கொதி வந்ததும் 6 விசில் விட்டு எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“