இது மாதம்பட்டி ரங்கராஜ் செய்யும் ஸ்பெஷல் டிஷ் ஆகும். ஓப்பன் மசாலா தோசை வீட்டில் செய்து பாருங்க
தேவையான பொருட்கள்
இட்லி பொடி – 3 ஸ்பூன்
கேரட் துருவல் – 4 ஸ்பூன்
வெங்காயம் – 2 வெங்காயம் நறுக்கியது
இட்லி பொடி – 2 ஸ்பூன்
வேக வைத்த உருளைக்கிழங்கு – 6
தோசை மாவு – 3 கப்
உப்பு
கொத்தமல்லி இலை 1 கை பிடி
மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
மிளகாய் பொடி அரை ஸ்பூன்
எண்ணெய் 6 ஸ்பூன்
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் உளுந்து
1 ஸ்பூன் கடலை பருப்பு
நெய் 3 ஸ்பூன்
செய்முறை : ,முதலில் ஒரு பாத்திரல் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து கிளற வேண்டும். தொடர்ந்து அதில் அவித்த உருளைகிழங்கு உப்பு, மஞ்சள் பொடி, ,மிளகாய் பொடி சேர்த்து கிளரவும். வெங்காயத்தை நறுக்க வேண்டும். இதை தனியாக எண்ணெய்யில் வதக்க வேண்டும். கேரட்டை துருவி வைத்துகொள்ள வேண்டும். தோசைக் கல்லில் மாவை போட்டு வட்டமாக மாற்றவும், இதில் இட்லி பொடியை சேர்க்கவும். அதற்கு மேலாக நெய் மற்றும் உருளைக்கிழங்கு மசாலா வைக்க வேண்டும். தொடர்ந்து அதற்கு மேலாக வதக்கிய வெங்காயம். தொடர்ந்து கேரட் துருவல், கொத்தமல்லி இலை தூவி. மொறு மொறுப்பாக சுட வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“