மாதம்பட்டி ரங்கராஜ் செய்வதில், இனிப்பு பணியாரம் ரொம்ப ஸ்பெஷலான ரெசிபி. இதை நீங்கள் வீட்டில் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
1 கப் பச்சரிசி
1 கப் இட்லி அரிசி
1 ஸ்பூன் துவரம் பருப்பு
கால் கப் உளுந்து
`1 ஸ்பூன் வெந்தயம்
1 கப் வெல்லம்
1 ஸ்பூன் ஏலக்காய் தூள்
1 ஸ்பூன் உப்பு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை : ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, இட்லி அரிசி, துவரம் பருப்பு , உளுந்து, வெந்தயம் சேர்த்து 6 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து இதை அரைத்துகொள்ளவும். இந்த மாவில் ஏலக்காய் பொடி, வெல்லம், உப்பு சேர்த்து நன்றாக கிளர வேண்டும். இதை பணியாரம் செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“