இனி மஷ்ரூம் 65 இப்படி செய்து பாருங்க. மாதம்பட்டி ரங்கராஜ் ரெசிபி.
தேவையான பொருட்கள்
3 ஸ்பூன் கடலை மாவு
2 ஸ்பூன் அரிசி மாவு
ஒரு ஸ்பூன் கான்பிளவர்
1 ஸ்பூன் மைதா
அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
2 ஸ்பூன் மிளகாய் தூள்
1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
அரை ஸ்பூன் கரம் மசாலா
அரை ஸ்பூன் மிளகதுத்தூள்
உப்பு
எலுமிச்சை சாறு
2 பாக்கெட் மஷ்ரூம்
கொஞ்சம் தண்ணீர்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, கான்பிளவர், மைதா மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகுத்தூள், உப்பு எலுமிச்சை சாறு, மஷ்ரூம் நறுக்கியது சேர்த்து தண்ணீர் தெளித்து கிளரவும். தொடர்ந்து இதை எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும்.