மாதம்பட்டி ரங்கராஜ் செய்வதில் ரொம்பவே சூப்பரனா ரெசிபி, இந்த கொங்கு ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை நீங்களும் செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன்- ¾ கிலோ
சீரக சம்பா- ½ கிலோ
பட்டை – 2 துண்டு
பெஞ்சீரகம்- 1 ஸ்பூன்
கிராம்பு – 4
மிளகு – 1 ஸ்பூன்
ஏலக்காய் – 5
சோம்பு – 1 ஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 3
1 கை நிறைய புதினா
1 கை நிறைய கொத்தமல்லி
இஞ்சி – பூண்டு விழுது- 2 ஸ்பூன்
எண்ணெய் – 200 எம்.எல்
தயிர்- 1 கப் முழுவதும்
நெய் – 2 ஸ்பூன்
உப்பு
மிளகாய் தூள்- 3 ஸ்பூன்
மஞ்சள் பொடி – அரை ஸ்பூன்
கரம் மசாலா- 1 ஸ்பூன்
கடல் பாசி கொஞ்சம்
பிரியாணி இலை 2
செய்முறை : அரை கிலோ சீரக சம்பா அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் மட்டன் சேர்த்து தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு மட்டனை வேக வைக்கவும். பிரியாணி மசாலா அரைக்க மிக்ஸியில் பிரியாணி இலை, பட்டை, கடல் பாசி, சோம்பு, ஜாவித்திரி, 4 கிராம்பு, ஏலாக்காய், மிளகு, சீரகம், சோம்பு இவை அனைத்தையும் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து குக்கரை நாம் அடுப்பில் வைக்க வேண்டும். அதில் எண்ணெய் சேர்க்கவும் பிரியாணி மசாலாவை சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் வெங்காயம் நறுக்கியது சேர்த்து கிளரவும். தொடர்ந்து பச்சை மிளகாய், தக்காளி நறுக்கியதை சேர்க்கவும். தொடர்ந்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளரவும். தொடர்ந்து மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளரவும். இதன் பிறகு கரம் மசாலா சேர்த்து கிளரவும். தொடர்ந்து புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளரவும். தயிர் சேர்த்து கிளரவும். தொடர்ந்து கிளரவும். அதன்பிறகு வேக வைத்த மட்டனை சேர்த்து கிளரவும். எண்ணெய் வெளியாகும் வரை வேக வேண்டும். உப்பு சேர்த்து 5 கப் தண்ணீர், தொடர்ந்து தண்ணீர் கொதிக்க வேண்டும், தற்போது அரிசியை சேர்த்து கிளரவும். 2 விசில் விட்டு எடுத்தால் போதும்.