ஏராளமான மருத்துவ குணங்களை தன்னக்கத்தே உள்ளாக்கியுள்ள மாதுளையில் சூப்பரான மற்றும் டேஸ்டியான சட்னியை மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி எளிதியில் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தெய்வீக பழம் என மாதுளை பழம் அழைக்கப்படுகிறது. இவை ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-ட்டியூமர் பண்புகளைக் கொண்டுள்ளன. வைட்டமின்கள் குறிப்பாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ மற்றும் ஃபோலிக் அமிலத்தின் நல்ல மூலமாக இது உள்ளது.
Advertisment
மாதுளையில் இரண்டு சேர்மங்கள் உள்ளன. புனிகலஜின் மற்றும் பியூனிசிக் அமிலம். இது அனைத்து சக்திவாய்ந்த நன்மைகளையும் தருகிறது. மாதுளையை தினமும் சாப்பிடுவது அல்லது சாறு குடிப்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு சிறந்த உதவியாக இருக்கும். மேலும், டைப் -2 நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுகிறது, இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்,
அத்துடன், மாதுளை பழம் செரிமானத்தை சீராக்குகிறது மற்றும் உங்கள் சருமத்தையும் பளபளப்பாக மாற்றுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கனியாக உள்ள மாதுளையில் இன்னும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது
இப்படியாக ஏராளமான மருத்துவ குணங்களை தன்னக்கத்தே உள்ளாக்கியுள்ள மாதுளையில் சூப்பரான மற்றும் டேஸ்டியான சட்னியை மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி எளிதியில் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
Advertisment
Advertisement
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன் கடுகு - சிறிதளவு கடலை பருப்பு - 1/2 ஸ்பூன் உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன் வர மிளகாய் - 2 பெரிய வெங்காயம் - பாதி அளவு மாதுளை - 1 உப்பு தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
நீங்கள் செய்ய வேண்டியது
முதலில் ஒரு மண் சட்டி அல்லது கடாய் எடுத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு அதில் கடுகு போட்டுக் கொள்ளவும்.
அவை பொரிந்து வந்ததும் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்க்கவும். அவற்றை கரண்டியால் கிளறிய பின்னர், வர மிளகாய் சேர்க்கவும்.
பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். இவை ஓரளவுக்கு வெந்த பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
சட்டியில் இருக்கும் சூடு ஓரளவுக்கு குறைந்த உடன் உடைத்து பற்களாக எடுத்து வைத்துள்ள மாதுளையை சேர்க்கவும். இவற்றுடன் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி கொள்ளவும். பிறகு அவற்றுடன் உப்பு சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.
கடைசியாக மல்லி தழையை தூவி விட்டால் நீங்கள் எதிர்பார்தத மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல் மாதுளை சட்னி தயாராக இருக்கும். இந்த சட்னியை உங்களுக்கு பிடித்த உணவுகளுடன் சேர்த்து ருசித்தது மகிழலாம்.