சமையல் கலை வல்லுநராக வலம் வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் தற்போது விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் அனைவருக்கும் பரிச்சயமாகி இருக்கிறார்.
இவரது ரெசிபிக்கள் அனைத்தும் அனைவரையும் கவர்ந்து வருகிறது. அந்த வகையில், அவரது கைவண்ணத்தில் தயார் செய்யப்பட்ட ரோட்டு கடை காளான் எப்படி எளிதில் உங்களது வீடுகளில் தயார் செய்து ருசிக்கலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
காளான் - 250 கிராம் (பொடியாக நறுக்கிறது)
கருவேப்பிலை
பெரிய வெங்காயம்
கான் பிளவர் மாவு
சோயா சாஸ்
தக்காளி சாஸ்
ரெட் சில்லி சாஸ்
எண்ணெய்
உப்பு
மிளகு தூள்
கரம் மசாலா
இஞ்சி - பூண்டு பேஸ்ட்
மிளகாய் தூள்
சிம்பிள் செய்முறை
காளான் தயார் செய்ய முதலில் அவற்றை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு, ஒரு பாத்திரம் எடுத்து அதில் காளான் சேர்க்கவும். பிறகு அவற்றுடன் கருவேப்பிலை, கான் பிளவர் மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் உப்பு, மிளகாய் தூள் சேர்த்த்து கலந்து கொள்ளவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்தது பிசைந்து கொள்ளவும்.
இவற்றை நன்கு கொதிக்க வைத்துள்ள எண்ணெயில் போட்டு வறுத்துக் கொள்ளவும். ஆரஞ்சு - பிரவுன் கலரில் வரும் வரை காளானை வறுத்துக் கொள்ளவும்.
தொடர்ந்து, ஒரு கடைய எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். பிறகு, 2 ஸ்பூன் இஞ்சி - பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். கருவேப்பிலை சேர்த்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பின்னர் சிவப்பு மிளகாய் தூள், மிளகு தூள் சேர்க்கவும். தண்ணீர் 250 மில்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இவை நன்கு கொதித்து வர விடவும். பிறகு 2 ஸ்பூன் தக்காளி சாஸ், 2 ஸ்பூன் சில்லி சாஸ், 2 ஸ்பூன் சோயா சாஸ் சேர்க்கவும், அத்துடன் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இதன் பிறகு, ஏற்கனவே வறுத்து வைத்துள்ள காளானை சேர்க்கவும். இவற்றை கம்மியான தீயில் வைத்து வேக வைக்கவும். அவை நன்கு சுண்டி வரும் வரை வேக வைக்கவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த மாதம்பட்டி ரங்கராஜின் ரோட்டு கடை காளான் தயாராக இருக்கும். இவற்றை கிண்ணத்தில் எடுத்து அதன் மேல் வெங்காயம், கொத்தமல்லி தழை, கருவேப்பிலை தூவி ருசித்து மகிழலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.