மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல்... இளநீர் இட்லி வித் கொய்யா சட்னி!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமாகி இருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். அவரது கைவண்ணத்தில் தயார் செய்யப்பட்ட இளநீர் இட்லி மற்றும் கொய்யா சட்னியை எப்படி தயார் செய்து ருசிக்கலாம் என்று பார்க்கலாம்.
மாதம்பட்டி ரங்கராஜ் பாணியில் இளநீர் இட்லி மற்றும் கொய்யா சட்னி
Madhampatty Rangaraj Recipes: சமையல் கலை வல்லுநராக வலம் வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் தற்போது விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் அனைவருக்கும் பரிச்சயமாகி இருக்கிறார். இவரது ரெசிபிக்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. அந்த வகையில், அவரது கைவண்ணத்தில் தயார் செய்யப்பட்ட இளநீர் இட்லி மற்றும் கொய்யா சட்னியை எப்படி எளிதில் உங்களது வீடுகளில் தயார் செய்து ருசிக்கலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
Advertisment
இளநீர் இட்லி - தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 4 கப் உளுந்து - 1 கப் வெந்தயம் - சிறிதளவு அவல் - 1 கப் இளநீர் - 1
நீங்கள் செய்ய வேண்டியது:
Advertisment
Advertisement
முதலில் இட்லி அரிசி மற்றும் உளுந்து நன்கு கழுவிக் கொள்ளவும். பிறகு அவற்றை இரவு முழுதும் நல்ல தண்ணீர் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். உளுந்துடன் வெந்தயம் சேர்த்து ஊற வைக்கவும்.
நீங்கள் இவற்றை இரவு முழுதும் ஊற வைக்கலாம். அல்லது குறைந்து 4 முதல் 5 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு இவற்றை தனித்தனியாக கிரைண்டரில் போட்டு அரைத்து எடுக்கவும்.
இட்லி அரிசி மற்றும் உளுந்தை அரைக்கும் போது தண்ணீருக்குப் பதிலாக இளநீர் சேர்த்துக்கொள்ளவும்.
அவல் மட்டும் இட்லி அரிசி மற்றும் உளுந்து அரைப்பதற்கு அரை அல்லது கால் மணி நேரத்திற்கு முன்பாக ஊற வைத்துக் கொள்ளலாம். அவலை நீங்கள் மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இட்லி அரிசி, உளுந்து மற்றும் அவல் ஆகியவற்றை தனித்தனியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு அவற்றை ஒரு பாத்திரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். அத்துடன் உப்பு சேர்த்தது நன்கு கலந்து கொள்ளவும். பிறகு அவற்றை புளித்து பொங்கி வர விட்டுவிடவும்.
மாவு நன்கு பொங்கி வந்தவுடன் அவற்றில் இட்லிகளை சுட ஆரம்பிக்கலாம். உங்களுக்கு நிச்சயம் பஞ்சு போன்ற இட்லி கிடைக்கும். இந்த இட்லியை ருசிக்க சூப்பரான மற்றும் டேஸ்டியான கொய்யா சட்னி எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
கொய்யா சட்னி - தேவையான பொருட்கள்:
அரைக்க
எண்ணெய் - சிறிதளவு உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன் கடலை பருப்பு - 1/2 ஸ்பூன் சின்ன வெங்காயம் - தேவையான அளவு வர மிளகாய் - 6 பூண்டு - 6 பற்கள் தக்காளி - 2 கொய்யா பழம் - 1 (பாதி பழம் பாதி காயாக இருக்கணும்) கருவேப்பிலை - சிறிதளவு தேங்காய் - துருவியது கல் உப்பு - தேவையான அளவு புளி - சிறிதளவு
தாளிக்க
கடுகு வர மிளகாய் பெருங்காயம்
நீங்கள் செய்ய வேண்டியது
முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். அவை சூடு ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். அரைக்கும்போது கெட்டியாக அரைக்கவும்.
பிறகு தாளிப்புக்கு கொடுக்கப்பட்ட பொருட்களை கடாயில் போட்டு தாளிப்பை தயார் செய்து கொள்ளவும். பிறகு அவற்றை ஏற்கனவே அரைத்து வைத்துள்ள சனியுடன் சேர்க்கவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான கொய்யா சட்னி தயாராக இருக்கும். இவற்றை பஞ்சு போன்ற இட்லி மற்றும் தோசையுடன் சேர்த்து ருசித்தது மகிழலாம். நீங்களும் நிச்சயம் ஒருமுறை ட்ரை பண்ணுங்க மக்களே!!!