அவியல் ரெடி பண்ண இதுதான் சீக்ரெட் பொருள்: மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் இப்படி செஞ்சு அசத்துங்க!

மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் ஒரு அவியல். அதுவும் அவர் சொன்ன சீக்ரெட் டிப்ஸை வைத்து எப்படி செய்வது என்று பார்ப்போம்.

மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் ஒரு அவியல். அதுவும் அவர் சொன்ன சீக்ரெட் டிப்ஸை வைத்து எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aviyal

சமையல் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு சமைக்க பிடிக்கும். ஆனால் இறுதியாக அனைவருக்கும் சமையல் பிடித்து விடும். நம்மில் நிறைய பேருக்கு ருசியான புதுபுது உணவுகளை தேடி சாப்பிடுவது என்பது இருக்கும். நிறைய கடைகள் நிறைய ஊர்களில் இருக்கும் உணவுகளை சுவைக்க தோன்றும். 

Advertisment

அப்படியாக உணவு மீது அதீத காதல் கொண்டவர்கள் தான் இங்கு அதிகம் இருப்பார்கள். அவர்களில் பலர் இப்போது புதுசு புதுசான உணவுகளை எப்படி சமைப்பது என்று தேடி பிடித்து சமைத்து சாப்பிடுகின்றனர். அப்படியாக நாம் உணவுகளை எடுத்தோம் என்றால் எல்லாம் நமக்கு சமைக்க தெரிந்த உணவுகளாக தான் இருக்கும் ஆனால் அதனை எப்படி சுவையாக சமைப்பது என்று தான் நமக்கு தெரியாது.

இந்தியாவின், தமிழ்நாட்டின் பிரபலமான சமையல் கலைஞர், நடிகர், குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடுவர் என பிரபலமாக இருப்பவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அப்படியாக சுவையான அவியல் வெறும் 10 நிமிடத்தில் ஈஸியாக எப்படி செய்வது என்று மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருக்கும் வீடியோவை வைத்து மிஸ்ஸஸ் ஹோம்ஃபுட் ப்ராடெக்ட் யூடியூப் பக்கத்தில் அவியல் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

Advertisment
Advertisements

கேரட்
பீன்ஸ்
சேனைக்கிழங்கு
நேந்திரம் வாழைக்காய்
கொத்தவரங்காய்
அவரைக்காய் 
முருங்கைக்காய்
தட்டைக்காய் அல்லது நீள பீன்ஸ்

செய்முறை

அவியலுக்காக கேரட், பீன்ஸ், சேனைக்கிழங்கு, நேந்திரம் வாழைக்காய், கொத்தவரங்காய், அவரைக்காய், முருங்கைக்காய், நீல பீன்ஸ் ஆகியவற்றை நீள நீளமாக நறுக்கி வேகவைத்து கொள்ளவும்.

பின்னர் ஒரு மிக்சி ஜாரில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் அரைத்து வைக்கவும். இப்போது கடாயில் வெந்து இருக்கும் காய்களுடன் அரைத்த தேங்காய், மஞ்சள் தூள் போட்டு கலந்து விடவும். பின்னர் உப்பு,யிர் சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரை வேகவிடவும்.

அதில் இருக்கும் தண்ணீர் வற்ற சிறிது நேரம் முன்பு தேங்காய் எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் சேர்க்கவும். அவ்வளவு தான் தண்ணீர் வற்றியதும் இறக்கினால் அவியல் ரெடியாகிவிடும். சூடாக சாதத்துடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.

Madhampatty Rangaraj

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: