மாதம்பட்டி ரங்கராஜ் ட்ரெண்டிங் ரெசிபி... தேங்காய் பால் ரசம் - சிம்பிள் டிப்ஸ்!
ஒரு ஆரோக்கியமான உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் காணப்படுகிறது. இதில் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளன. இந்த கரையாத நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.
தேங்காய் சதையில் காணப்படும் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை குடல் பாக்டீரியாவை மேம்படுத்த உதவுகின்றன.
நமது இந்திய சமையலை பொறுத்தவரை தேங்காயை சமையலில் அதிகமாக சேர்கிறார்கள். இவற்றில் ஏராளமான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இவை நாம் உட்கொள்ளக் கூடிய ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும்.
Advertisment
தேங்காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இவற்றில் இருந்து நீங்கள் பால் மற்றும் எண்ணெய் பிரித்தெடுக்க முடியும். தேங்காய் சதையில் உயர்ந்த கொழுப்பு மற்றும் கலோரிகள் காணப்படுகிறது. இதில் மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன.
ஒரு ஆரோக்கியமான உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் காணப்படுகிறது. இதில் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளன. இந்த கரையாத நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. தேங்காய் சதையில் காணப்படும் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை குடல் பாக்டீரியாவை மேம்படுத்த உதவுகின்றன. இது உங்கள் செரிமான அமைப்பை மற்ற பிரச்சினைகளில் இருந்தும் வீக்கத்தில் இருந்தும் பாதுகாக்கிறது.
இப்படியாக ஏரளமான நன்மைகளை உள்ளடக்கியுள்ள தேங்காயை வைத்து டேஸ்டியான தேங்காய் பால் ரசம் தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
Advertisment
Advertisement
தேங்காய் பால் ரசம் - தேவையான பொருட்கள்:
சீரகம் - 1 டீஸ்பூன் மிளகு - 1 டீஸ்பூன் மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு - 6 பற்கள் கருவேப்பிலை - சிறிதளவு பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 தக்காளி - 1 கொத்தமல்லி புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்) தேங்காய் - 1/2 மூடி (துருவியது) நெய் - 1 1/2 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன்
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு மிக்சி எடுத்து அதில் சீரகம், மிளகு, மல்லி விதை, பூண்டு, கருவேப்பிலை, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பிறகு தேங்காயில் இருந்து பால் எடுக்க தேங்காயை மிக்சியில் போட்டு அரைக்கவும். அதனை பாலாக எடுத்துக் கொள்ளவும்.
இதன்பின்னர், ஒரு தக்காளி எடுத்து அதனை நன்றாக மசித்துக்கொள்ளவும். அதனுடன் ஏற்கனவே ஊறவைத்துள்ள புளிக்கரைசலை சேர்க்கவும். அவற்றுடன் கொத்தமல்லி தழையின் தண்டைச் சேர்க்கவும். தொடர்ந்து அவற்றுடன் இரண்டாவதாக அரைத்து எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கொள்ளவும்.
இதன்பிறகு, ஒரு கடாய் அல்லது மண் சட்டி எடுத்து அடுப்பில் வைத்து சூடேற்றவும். அதில் நெய் சேர்க்கவும், அத்துடன் கடுகு சேர்த்து பொரிந்து வந்ததும் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்க்கவும். அவற்றை பச்சை வாசம் போக்குவரை வதக்கவும்.
பின்னர், ஏற்கனவே கலந்து வைத்துள்ள தக்காளி, புளி, இரண்டாவதாக அரைத்து எடுத்த தேங்காய் பால் ஆகிய கலவையை சேர்க்கவும். இவை நன்றாக கொதித்து வந்த பிறகு, அடுப்பை அனைத்து விடவும்.
இப்போது, முதலில் அரைத்து எடுத்த தேங்காய் பால் சேர்க்கவும். பிறகு அவற்றின் மேலே சிறிதளவு கருவேப்பிலையை தூவி வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றினால் நீங்கள் எதிர்பார்த்த தேங்காய் பால் ரசம் தயார்.