மாதம்பட்டி ரங்கராஜின் அசத்தல் ரெசிபி தக்காளி கடையல். ஒரு சூப்பர் சைடிஷாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
தக்காளி 8
1 பெரிய வெங்காயம்
5 சின்ன வெங்காயம்
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
2 கொத்து கருவேப்பில்லை
4 பூண்டு
கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி
1 ஸ்பூன் மிளகாய் பொடி
1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
2 வத்தல்
1 பச்சை மிளகாய்
4 ஸ்பூன் நல்லெண்ணெய்
செய்முறை : ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கிளரவும். நன்றாக வதக்கவும். தொடர்ந்து தக்காளி சேர்த்து கிளரவும். தொடர்ந்து மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கிளரவும். 2 கப் தண்ணீர் சேர்க்கவும். குக்கரை மூடி 2 விசில் வந்ததும். குக்கரை திறக்கவும். தொடர்ந்து இதை நன்றாக கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“