மெட்ராஸ் சமையல் ஸ்பெஷல்: இட்லி, தோசை, சப்பாத்திக்கு ருசியான சென்னா மசாலா கிரேவி!

இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற ருசியான சென்னா மசாலா கிரேவி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற ருசியான சென்னா மசாலா கிரேவி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
channa masala

சென்னா மசாலா

இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற சன்னா கிரேவி எப்படி செய்வது என்று பார்ப்போம். இதனை கிரேவியாக மட்டும் இல்லாமல் ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். 

Advertisment

தேவையான பொருட்கள்

கொண்டை கடலை
தேங்காய்துருவல் 
வரமிளகாய்
உப்பு
பொட்டுகடலை
பெருங்காயம்
மிளகாய்தூள்
சீரகத்தூள்
கரம்மசாலா
மஞ்சள் தூள் 
எண்ணெய்

செய்முறை

Advertisment
Advertisements

முதலில் கடலையை சுத்தம் செய்து 8 மணிநேரம் ஊறவைத்து பின்னர் குக்கரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். 

அதேபோல தேங்காய், வரமிளகாய், உப்பு, பெருங்காயம், பொட்டு கடலை அரைத்து வைத்துக்கொள்ளவும். 

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேகவைத்த கடலையை போடவும். பின் அரைத்த விழுதை சேர்த்து கிளறி விடவும். 

பின்னர் அதில் சீரகத்தூள், குழம்பு மிளகாய்தூள்,மஞ்சள் பொடி, கரம் மசாலாப்பொடி சேர்த்து கலந்து விடவும். 

பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்துவிட்டு  கிரேவி பதம் வரும் போது இறக்கி விடவும். 

Food Recipes Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: