மதுரை ஸ்டைலில் மட்டன் கறிதோசை இனி வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். அதுவும் செஃப் தீனா ரெஸிபி ஸ்டைலில் எப்படி செய்வது என்று அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
மட்டன் சுக்கா - 1 கிலோ
மட்டன் மின்ஸ் - 1/2 கிலோ
முட்டை - 10
வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 200 கிராம்
பச்சை மிளகாய் - 5 அல்லது 6
இஞ்சி பேஸ்ட் - 75 கிராம்
பூண்டு பேஸ்ட் - 75 கிராம்
மிளகு தூள் - 50 கிராம்
சீரகத்தூள் - 50 கிராம்
மிளகாய் தூள் - 50 கிராம்
உப்பு
கறிவேப்பிலை
கொத்தமல்லி தழை
நல்லெண்ணெய் - 1/4 லிட்டர்
செய்முறை
முதலில் மட்டன் சுக்கா செய்ய வேண்டும். அதற்கு கறியை சிறிது மிளகாய் தூள் உப்பு போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இரண்டாவதாக கரியை கொத்து போட்டு வாங்கி வேக்காடு போட்டு அதையும் எடுத்துக் கொள்ளவும்.
கொத்துக்கறியை எடுத்து பேஸ்ட் மாதிரி மிச்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
மதுரை மாசான மட்டன் கறி தோசை இதான்! மதுரை எஸ்பிஎல் மட்டன் கரி தோசை |செஃப் தீனாவின் சமையலறை
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் இஞ்சி பேஸ்ட் சேர்த்து கலந்து விடவும். ஒரு ஐந்து நிமிடம் கழித்து நறுக்கிய தக்காளியை அதில் சேர்த்து கலந்து கொள்ளவும். தக்காளியும் நன்கு வதங்கியதும் அதில் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும் அதேபோல சீரகத்தூளும் சேர்க்க வேண்டும்.
பின்னர் இதில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு தேவையான அளவு உப்பு போட்டு கலந்து கொண்டால் கிரேவி மாதிரி ரெடியாகிவிடும். மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள கொத்துக்கறியை போட்டு கிளறி ஒரு கொதிவிட்டு எடுக்கவும்.
இப்போது ஒரு தோசை கல்லில் வேகவைத்து வைத்துள்ள கறியை எடுத்து கொத்து போட வேண்டும். இந்த கொத்துக்கறியோடு கிரேவியையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் சுவைக்காகவும் காரத்திற்காகவும் மிளகுத்தூள் சேர்த்து பின்னர் மேலே கொத்தமல்லித்தழை, கருவேப்பிலைகளை தூவி மசாலாக்களை தனியே எடுத்து வைக்கவும்.
எப்போதும் போல தோசை ஊற்றாமல் கொஞ்சம் மொத்தமாக ஊற்றி மேலே முட்டையை உடைத்து கலந்து ஊற்றி தயார் செய்துள்ள மசாலாவை மேலே வைத்து எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் அவ்வளவுதான் மதுரை ஸ்பெஷல் மட்டன் கறி தோசை ரெடி.