மதுரை வெஜிடபிள் பால் குருமா ஒரு கிரீமி மற்றும் சுவையான மசாலாப் பொருட்களைக் கொண்ட ஒரு தென்னிந்திய உணவு ஆகும். கலந்த காய்கறிகள் மற்றும் பசுவின் பாலுடன் தயாரிக்கப்படும் இது ஒரு திருப்திகரமான உணவாகும், இது பெரும்பாலும் தமிழ்நாட்டின் மதுரை பகுதியிலிருந்து அரிசி, சப்பாத்தி, இடியாப்பம் அல்லது பரோட்டாவுடன் பரிமாறப்படுகிறது.
பால் குருமா எப்படி செய்வது என்று செஃப் தீனா யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் - 300 மில்லி
கேரட் - 150 கிராம்
பீன்ஸ் - 150 கிராம்
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
வெண்ணெய் பயறு - 150 கிராம்
வெங்காயம் - 400 கிராம்
இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
பட்டை - 2 கிராம்
கிராம்பு - 2 கிராம்
ஏலக்காய் - 2 கிராம்
பெருஞ்சீரகம் - 2 கிராம்
முந்திரி பருப்பு - 200 கிராம்
முழு தேங்காய் - 2
பசும்பால் - 1/2 லிட்டர்
உப்பு - சுவைக்கேற்ப
புதினா இலைகள் - ஒரு கைப்பிடியளவு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
நெய் - 100 மில்லி
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
பின்னர் அதில் வாசனைக்கு தேவையான அளவு புதினா, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் தேவையான அளவு முந்திரி பருப்பு போட்டு கெட்டியாக அரைத்து அதையும் இந்த வெங்காயத்துடன் சேர்த்து கிளறி விடவும்.
பந்தியில பஞ்சா பறக்கும் பால் குர்மா | மதுரை புகழ்பெற்ற வெஜ் பால் கூர்மம் | செஃப் தீனாவின் சமையலறை
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காய்கறிகளை சேர்க்க வேண்டும். உருளைக்கிழங்கு மசித்து சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல நிலக்கடலை, கேரட் பீன்ஸ் போன்ற காய்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போடவும் போட்டு வேக விடவும்.
பின்னர் ஒரு கடாயில் நெய் போட்டு சோம்பு, பட்ட கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர சோம்பு, பெருஞ்சீரகம், அன்னாசிப்பூ இவை அனைத்தையும் சேர்த்து வதக்கி அதை இந்த குருமாவில் சேர்க்கவும். பின்னர் அந்த குழம்பில் காய்ச்சிய பால் ஊற்றி உப்பு சிறிது சேர்த்து கொதி விட்டு இறக்கவும்.