தேங்காய் வீட்டில் இல்லை அப்போ கவலையே வேண்டாம். உங்களுக்காகவே ஒரு சட்னி அதுவும் மதுரை ஸ்டைலில் செய்யலாம்.
சட்னி அவ்வளவு சுவையாக இருக்கும். இதை ஒரு முறை சாப்பிட்டு விட்டாலே இனி சட்னிக்கு தேங்காய் வாங்க வேண்டிய எண்ணமே வராது.
அப்படிப்பட்ட மதுரை தண்ணி சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய்
கடுகு
பச்சை மிளகாய்
சின்ன வெங்காயம்
காய்ந்த மிளகாய்
இஞ்சி
பூண்டு
பொட்டுக்கடலை
உப்பு
சீரகம்
கருவேப்பிலை
நீங்கள் எப்போதும் வீட்டில் சமைக்கும் அளவு முறையையே இதற்கும் பயன்படுத்தலாம்.
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானது கீறிய பச்சை மிளகாய்,காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு அனைத்தையும் வதக்கி ஆற வைக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை மற்றும் வதக்கி வைத்துள்ளதை சேர்த்து அரைத்து பின்னர் தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.
தேங்காய் சேர்க்காத மதுரை தண்ணி
வேறொரு பவுலில் மாற்றி உப்பு மற்றும் தாராளமாக தண்ணீர் ஊற்றி கரைத்து எடுத்து கொள்ளவும். இதனை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வரமிளகாய் கிள்ளி போட்டு கருவேப்பிலையை சேர்த்து தாளித்து எடுத்தால் மதுரை தண்ணீர் சட்னி ரெடி ஆகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“