மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செய்வது போன்ற சர்க்கரைப் பொங்கல் அதுவும் செஃப் தீனாவின் ஸ்டைலில் செய்வதற்கு பச்சரிசி,நெய்,வெல்லம், முந்திரி, காய்ந்த திராட்சை, ஏலக்காய் தூள் ஆகிய பொருட்கள் தேவைப்படும்.
2/4
பச்சரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அது கொதி வந்ததும் அரிசியை சேர்த்து வேக விடவும். அரிசி நன்கு வெந்து வந்ததும் சிறிது சிறிதாக நெய் ஊற்றி கிளற வேண்டும்.
3/4
பிறகு அதில் உடைத்து வைத்துள்ள வெல்லத்தையும் சேர்த்து நன்கு கிளறி விடவும். பின்னர் ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சைகளை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
Advertisment
4/4
நன்கு வறுபட்டதும் பொங்கலுடன் சேர்த்து அதனுடன் சிறிது ஏலக்காய் தூளையும் சேர்த்து கிளறி விட்டு எடுத்தால் சுவையான மீனாட்சி கோயில் பிரசாதமான சர்க்கரை பொங்கல் ரெடி ஆகிவிடும்.