மதுரை பாணியில் அசத்தலான சுவையில் மட்டன் கறிதோசை... மட்டன் மசாலா இப்படி செய்து பாருங்கள்

மதுரை ஸ்டைலில் சுவையான கறிதோசை எப்படி செய்வது என்று பார்ப்போம். அதற்கு மட்டன் கொத்துக்கறி மசாலா சுவையாக செய்ய வேண்டும்.

மதுரை ஸ்டைலில் சுவையான கறிதோசை எப்படி செய்வது என்று பார்ப்போம். அதற்கு மட்டன் கொத்துக்கறி மசாலா சுவையாக செய்ய வேண்டும்.

author-image
WebDesk
New Update
கறிதோசை

மட்டன் கறிதோசை

மதுரை ஸ்டைலில் மட்டன் கறி தோசை சுவையாகவும் காரசாரமாக மதுரை ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம். கறிதோசை செய்வது பற்றி ஆனாஸ் குக்கிங் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

Advertisment

தேவையான பொருட்கள்

எண்ணெய்

வெங்காயம்

Advertisment
Advertisements

பச்சை மிளகாய்

கறிவேப்பிலை

இஞ்சி பூண்டு பேஸ்ட்  

தக்காளி  

கல் உப்பு  

மிளகாய் தூள்  

மல்லித் தூள்

சீரகத் தூள்

மஞ்சள் தூள்  

மிளகுத் தூள்

மட்டன் கொத்துக்கறி  

கரம் மசாலா  

கொத்தமல்லி  

முட்டை

தோசை மாவு  

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும். 

பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் , நறுக்கிய தக்காளி மற்றும் கல் உப்பு சேர்த்து தக்காளியை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரை வதங்கவும். இதையடுத்து மட்டன் கறியை போட்டு 5 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கி வேக வைக்கவும். நன்கு வெந்ததும் கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கொத்துக்கறி மசாலா தயார். 

மட்டன் கறி தோசை

பின்னர் ஒரு பாத்திரத்தில்  2 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். அதனையடுத்து  தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, தடிமனாக மாவு ஊற்றி கொள்ள வேண்டும்.

பின்னர் அதன் மேல் முட்டையை ஊற்றி, பின் கறி மசாலாவை பரப்பி, எண்ணெய் ஊற்றி, தோசைக்கரண்டியால் மசாலாவை அழுத்திவிட்டு, பின் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுத்தால் சுவையான மதுரை  கறி மசாலா தோசை தயார். 

Dosa Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: