மதுரை ஸ்பெஷல் முள்ளு முருங்கை வடை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம்.
மதுரையில் கடைகளில் மட்டும் கிடைக்கும் இந்த முள்ளு முருங்கை வடையை வீட்டில் பூரி மாதிரி புஸ்ஸூன்னு செய்து மேலே ஒரு பொடி தூவி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
அப்படிப்பட்ட முள்ளு முருங்கை வடையை வீட்டில் செய்வதற்கான வழிமுறைகளை ஃபூடிஸ்ரூஃப் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி
முள்ளு முருங்கை இலை
உப்பு
பூண்டு
மிளகு
சீரகம்
உப்பு
அரிசி மாவு
உளுந்து
வர மிளகாய்
பொட்டுக்கடலை
செய்முறை
முதலில் வடை மேல் தூவ பொடி தயார் செய்யலாம். அதற்கு ஒரு கடாயில் உளுந்து வர மிளகாய், சீரகம், மிளகு போட்டு வறுக்கவும். இதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் பொட்டுக்கடலை, உப்பு அனைத்தையும் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
பின்னர் வடை செய்யலாம். அதற்கு முதலில் இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் முள்ளு முருங்கை இலையோட நரம்பை நீக்கி கழுவி வைக்கவும்.
Madurai Mullu murungai vadai celebrating Foods of Tamilnadu
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி, முள்ளு முருங்கை இலை, பூண்டு, மிளகு, சீரகம், உப்பு சேர்த்து தண்ணி விடாமல் கெட்டியாக அரைக்கவும். பின்னர் அதில் சிறிது அரிசி மாவு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
அடுத்ததாக ஒரு வாழை இலையில் மாவை வடை மாதிரி சிறிதாக தட்டி எண்ணெயில் போடவும்.
பூரி மாதிரி உப்பி வரும் வரை இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொறித்து எடுத்து வைக்கவும்.
அவ்வளவு தான் வடை எடுத்து மேலே தயார் செய்து வைத்துள்ள பொடியை தூவி சாப்பிடலாம்.