எப்போதும் சிக்கனில் ஒரே மாதிரியான டிஸ் செய்து போர் அடித்து விட்டதா? அப்போ ஒருமுறை இந்த மாதிரி சிக்கன் சுக்கா செய்து பாருங்கள். மதுரை ஸ்டைல் உனவு என்றாலே சுவையாக இருக்கும் அதிலும் மதுரை ஸ்டைல் காரசாரமான சிக்கன் சுக்கா என்றால் சொல்ல வேண்டுமா? என்ன அவ்வளவு ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
சிக்கன்
எண்ணெய்
உப்பு
மஞ்சள் தூள்
இடிச்ச இஞ்சி
இடிச்ச பூண்டு
மிளகாய்த்தூள்
முந்திரி
செய்முறை
மதுரை ஸ்டைலில் சிக்கன் சுக்கா செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சுத்தம் செய்த சிக்கன் இடிச்ச இஞ்சி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு இவை அனைத்தையும் சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் அதில் தேவையான தண்ணீர் ஊற்றி மசாலாக்கள் அனைத்து இடத்திலும் பரவும் வரை கலந்து விட்டு அடுப்பை பற்ற வைத்து இதை வேக வைக்க வேண்டும். பாதி வெந்ததும் அதில் இடிச்ச பூண்டு சேர்க்கவும்.
Madurai Style Boneless Chicken Sukka | மதுரை போன்லஸ் சிக்கன் சுக்கா | Dry Chicken Curry Recipe
பின்னர் அதில் சிறிது முந்திரி சேர்த்து நன்கு கிளறி விடவும். நல்ல நிறம் மாறி கறி வெந்து நல்ல வாசனை வரும் பதத்தில் எடுத்து சாப்பிடலாம் இதனை தோசை இட்லிக்கு வைத்தும் சாப்பிடலாம் சுடு, சாதத்துடன் பிரட்டி சாப்பிடலாம். ரசத்துடன் சேர்த்து சாப்பிட்டால் செம காம்பினேஷன் ஆக இருக்கும்.