சப்பாத்தி பரோட்டாவிற்கு ஏற்ற மதுரை ஸ்டைலில் சால்னா குக்கரில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய்
பட்டை
அன்னாசி பூ
ஏலக்காய்
பிரியாணி இலை
பெரிய வெங்காயம்
தக்காளி
சின்ன வெங்காயம்
தேங்காய்
சோம்பு
கிராம்பு
கசகசா
பாதாம் பருப்பு
இஞ்சி பூண்டு பேஸ்ட்
புதினா
மிளகாய் தூள்
மல்லித்தூள்
கரம் மசாலா
மஞ்சள் தூள்
உப்பு
கொத்தமல்லி தழை
செய்முறை
ஒரு குக்கரில் தேவையான அளவில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை,அன்னாச்சி பூ, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கி அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்க்கவும். அது வதங்கியதும் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சிறிது சேர்த்து வேகவிடவும். வெங்காயம் மற்றும் தக்காளி இதில் சிறிது கூடுதலாக சேர்க்க வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், தேங்காய், சோம்பு, கசகசா மற்றும் பாதாம் பருப்பை ஒரு 10 நிமிடம் ஊற வைத்து அதில் சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
10 நிமிடத்தில் மதுரை Famous பரோட்டா சால்னா | Veg Salna
பின்னர் தாளித்து வைத்துள்ள வெங்காயம் தக்காளிவுடன் சிந்து இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கி அதில் ஒன்றரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி விடவும்.
மசாலா வாசனை நீக்கி நல்ல மனம் வந்ததும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு ஐந்து நிமிடம் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து மீடியம் ஃப்ளேமில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.
இறக்கியவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிது சேர்த்து இட்லி தோசை பரோட்டாவுடன் வைத்து இந்த சால்னா சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“