ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு வகை ஃபேமஸாக இருக்கும். அந்த வகையில், மதுரையில் மிகவும் பிரசித்தி பெற்ற குடல் பெப்பர் சுக்காவை எப்படி சுலபமாகவும், சுவையாகவும் செய்யலாம் என்று இதில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
குடல்,
உப்பு,
மஞ்சள் தூள்,
தண்ணீர்,
சோம்பு,
சீரகம்,
மல்லி விதைகள்,
மிளகு,
நல்லெண்ணெய்,
சின்ன வெங்காயம்,
காய்ந்த மிளகாய்,
கறிவேப்பிலை,
இஞ்சி - பூண்டு விழுது,
கரம் மசாலா
செய்முறை:
முதலில், குடலை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதன் பின்பு, குடலை குக்கரில் போட்டு அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து 6 விசில் வரும் வரை முழுமையாக வேக வைக்க வேண்டும்.
இப்போது, அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சோம்பு, சீரகம், மல்லி விதைகள், மிளகு சேர்த்து வாசம் வரும் வரை வறுக்கலாம். அதன் பின்னர், இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
இனி, அடுப்பில் இருக்கும் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொந்நிறமாக வதக்க வேண்டும். இதையடுத்து, ஒரு ஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்க வேண்டும்.
இதற்கடுத்து, வேக வைத்த குடலை இதில் சேர்க்கலாம். இத்துடன் ஒரு ஸ்பூன் உப்பு, கரம் மசாலா, மிக்ஸியில் அரைத்து வைத்த மசாலா பொடி சேர்த்து கலக்கலாம். இறுதியாக, கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான குடல் பெப்பர் சுக்கா தயாராக இருக்கும்.