மேகி- 1 பாக்கெட்
பெரிய வெங்காயம்- 1
மிளகாய்த் தூள்- 1
கறிமசாலா தூள்- அரை ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கான்ஃப்ளார் மாவு- 2 ஸ்பூன்
எலுமிச்சை-சிறிதளவு
கொத்தமல்லி இலை- சிறிதளவு
செய்முறை
பாதியாக வேக வைத்த மேகியை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். பின்னர் கொத்தமல்லி இலை, எலுமிச்சைச் சாறு, உப்பு, தேவையான அளவு மிளகாய்ப் பொடி, கறி மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்கவும்.
அடுத்து 2 ஸ்பூன் கான்ஃப்ளார் மாவு சேர்த்து கலக்கவும். இப்போது அந்த மாவை கொஞ்சமாக கையில் எடுத்து கட்லெட் போல் வட்டமாக தட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த தட்டி வைத்துள்ள மேகி கட்லெட்டை எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான மேகி கட்லெட் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“