எப்போதும் மாலை வேளையில் டீ,காபியுடன் சூடாக ஸ்நாக்ஸ் சாப்பிடுவது பெரும்பாலானோருக்கு பிடிக்கும். குழந்தைகளும் பள்ளி முடிந்து வந்து ஸ்நாக்ஸ் சாப்பிடுவர். கடைகளில் ஸ்நாக்ஸ் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே 10 நிமிடத்தில் ஈஸியாக செய்யலாம். மைதா இருந்தால் போதும் சுலபமாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு – 1 கப்
அரிசி மாவு – 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் -1
புளித்த தயிர் – அரை கப்
சீரகம் – அரை டீஸ்பூன் (தட்டிப் போடவும்)
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவை போட்டு நன்றாக கலக்கவும். பிறகு நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்க்கவும். அடுத்து அதில் தயிர், சீரகம், உப்பு சேர்த்து கலக்கவும். கட்டியின்றி நன்கு கலக்கவும். பின்னர் போண்டாவிற்கு தேவையானது போல் கலவையை உருண்டை பிடிக்கவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும். உருண்டையை போட்டு பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் சுடச் சுடச் ஈவ்னிங் ஸ்நாக்ஸ் மைதா போண்டா ரெடி. மிதமான சூட்டில் சாப்பிட வேண்டும். ஆறிவிட்டால் ருசி இருக்காது. சட்னி தொட்டு சூடாக சாப்பிடலாம்.