மைதா கொண்டு கார துக்கடா செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 10 நிமிடத்தில் டக்குனு செய்யலாம்.
தேவையான பொருட்கள்
மைதா - 1 கப்
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா, மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும். அதில் தண்ணீர் சேர்த்து மாவை மிருதுவாகப் பிசைந்து குறைந்தது அரை மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.
இப்போது கொஞ்சம் மாவு எடுத்து உருட்டி, மெல்லிய சப்பாத்தியாக செய்து கத்தியால் குறுக்கும், நெடுக்கும் கோடிட்டு, டைமண்ட் வடிவத்தில் நறுக்கி கொள்ளவும். இதே போல் மாவு மொத்ததிற்கும் செய்து கொள்ளவும். ஒரு பெரிய தட்டில் தனித்தனியாகப் போட்டு வைக்கவும்.
அடுத்தாக, அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்திருக்கும் மாவை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். அவ்வளவு தான், சூப்பரான கார துக்கடா ரெடி. இதை காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“