இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட பொருத்தமான ஒன்று தேங்காய் சட்னி. தேங்காய் சட்னி செய்வதும் சுலபம் என்பதால் பெரும்பாலான வீடுகளில் காலை, இரவு உணவில் நிச்சயம் தேங்காய் சட்னி இருக்கும். பலருக்கும் தேங்காய் சட்னி பிடித்தமான சைட் டிஷ்ஷாக உள்ளது. இருப்பினும் தேங்காய் சட்னியை ரொம்ப நேரம் வைத்திருக்க முடியாது. காலை சமைத்து இரவு வரை வைத்திருக்க முடியாது. கெட்டுப் போய் விடும். ஆனால் கவலை வேண்டாம். இதற்கும் ஒரு டிப்ஸ் உள்ளது. தேங்காய் சட்னியின் பொருட்களை தாளித்து அரைப்பது இதற்கு தீர்வாகும். எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் – அரை கப்
பொட்டுக்கடலை – கால் கப்
பச்சை மிளகாய் – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 4 அல்லது 5
இஞ்சி – சிறியது
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்த பிறகு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். அடுத்து பொட்டுக்கடலை போட்டு வதக்க வேண்டும். இப்போது தேங்காய் துருவலை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
கலவையை ஆறவிட்டு, மிக்ஸியில் தேவையான அளவு உப்பு போட்டு அரைத்து எடுக்கவும். இப்போது மீண்டும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தாளித்தவைகளை சட்னியில் சேர்க்கவும். அவ்வளவு தான் தேங்காய் சட்னி ரெடி. இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம். இந்த முறையில் செய்வது சட்னி ஒரு நாள் முழுவதும் கெட்டுப் போகாமல் இருக்கும் மற்றும் டேஸ்ட் வித்தியாசமாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil