வீட்டில் நாம் மரப்பலைகையில் சப்பாத்தி மேக்கரை செய்ய முடியும். சில வழிமுறைகளை பயன்படுத்தி நாம் இந்த சப்பாத்தி மேக்கரை செய்யலாம்.

அதற்கு இரண்டு பெரிய மரத்திலானா போர்ட்களை ஒன்றாக சேர்க்க வேண்டும். இரண்டையும் ஸ்குரூ சேர்த்து ஒன்றாக சேர்க்க வேண்டும். இதுபோல இரண்டு சிறிய சதுர அளவில் மரக் கட்டையில் கை பிடி மாதிரி செய்து கொள்ள வேண்டும். இதை நாம் பசை பயன்படுத்தி ஒட்டலாம். தொடர்ந்து பெரிய மரப்பலகையுடன் ஸ்குரூ செய்து கொள்ளலாம்.

இந்த இரண்டு மரப்பலகைகளை ஒன்றன் மீது, ஒன்று திறக்கும் அளவிற்கு செய்து கொள்ள வேண்டும். தற்போது முதல் மரப்பலகையை திறக்கும் போது, இரண்டாம் மரப்பலகை மீது நாம் மாவு உருண்டைகளை வைக்க வேண்டும்.

தற்போது மேலே இருக்கும் மரப்பலகையை மூட வேண்டும், தொடர்ந்து கைபிடியை நன்றாக அமர்த்தினால் வட்டமான சப்பாத்தி கிடைக்கும்.

குறிப்பாக இந்த சப்பத்தி மாவு பிசையும் போது, அதிக தண்ணீர் இல்லாமால் பிசைய வேண்டும். மேலும் நாம் எப்போதும் மாவு போட்ட பிறகு, சப்பாத்தி உருண்டைகளை பலகையில் வைக்க வேண்டும். இதை ஒரு முறை நீங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil