சிறுதானியங்களுக்கு இணையானது... வெயிட் லாஸ் பண்ணும் மக்கள் மக்கானா சாப்பிடலாமா? டாக்டர் அருண்குமார் நச் பதில்!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டிய மக்கானா பற்றி டாக்டர் அருண்குமார் விளக்கி கூறுகிறார்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டிய மக்கானா பற்றி டாக்டர் அருண்குமார் விளக்கி கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
makhana

 உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு, மக்கானா சாப்பிடலாம் என டாக்டர் அருண்குமார் தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். மேலும் மக்கானாவின் நன்மை குறித்து அவர் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். 

Advertisment

மக்கானா என்று குறிப்பிடப்படும் தாமரை விதைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, கலோரி குறைவான ஒரு ஆரோக்கியமான சூப்பர் ஸ்னாக்ஸ் ஆகும். மக்கானாவில் மெக்னீஷியம், பொட்டஷியம், அன்டி ஆக்சிடென்ட்ஸ் இருக்கிறது.

மக்கானாவில் சோடியம் அளவு குறைவாக இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் கூட பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.  இதில் கால்சியம் சத்து இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்களுக்கு இவை வலிமை சேர்க்கிறது. உடல் நலத்தில் ஆரோக்கியம் கொண்டவர்கள், இதனை தாராளமாக எடுத்து கொள்ளலாம். 

மக்கானாவை வறுத்து  உப்பு, மிளகுத்தூள் போன்றவற்றை போட்டு வறுத்து மாலை ஸ்நாக்ஸ் மாதிரி கூட சாப்பிடலாம். மக்கானா, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராகவே உயர்த்துகிறது. மேலும், இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இதனால், சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

Advertisment
Advertisements

மக்கானாவில் நிறைந்துள்ள கால்சியம் நம்முடைய எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒரு மினரல்ஸ் ஆகும். மக்கானா எனப்படும் தாமரை விதை நார்ச்சத்து மிகுந்த உணவு பொருளாகவும், இதை மிதமான அளவில் சாப்பிட்டால் செரிமானத்திற்கு நல்லது. 

புரதம், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் தாமரை விதையில் நிறைந்திருக்கிறது. என்றாலும் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் வகையில், நாம் உண்ணும் உணவுகள் இருக்க வேண்டும். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Health benefits of consuming makhana

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: