குழந்தையின்மை பிரச்சனை இப்போது மிக முக்கிய சிக்கலாக மாறியிருக்கிறது. 15% தம்பதியினருக்கு இந்த சிக்கல் இருப்பதாக மருத்துவம் தொடர்பான ஆய்வு பத்திரிக்கை கூறுகிறது.
இந்நிலையில் இதற்கு மருந்துகள் இருந்தாலும், நாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்தாலே போதுமானதாக இருக்கும்.
எல்லா சத்துக்களும் சரிசமமாக இருக்கு டயட்டை பின்பற்ற வேண்டும். புகைபிடித்தல், மதுபானம் எடுத்துகொள்ளுதல் ஆகிய பழக்கங்களை கைவிட வேண்டும். மேலும் ஆண்கள், பெண்கள் என இருவரும் சரியான எடையில் இருக்க வேண்டும்.
சத்தான டயட் உணவுகள்
ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த உணவுகள், அதில் சிங் மற்றும் போலேட் இருக்கிறது. இவை ஆண்கள் மற்றும் பெண்களின் விந்தணுக்கள் மற்றும் முட்டைகளை சேதப்படுத்தாமல் தடுக்கிறது.
பழங்கள், காய்கறிகள், சிறுதானிய வகைகள், ஆண்களுக்கு விந்தணுவின் சக்தியை மற்றும் குழந்தை பிறப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. உணவில் உள்ள நார்சத்து அதிகபடியான ஹார்மோன்களான ஈஸ்டோஜன் மற்றும் புரஜஸ்டோனை குறைக்கிறது.
மேலும் அவக்கடோ, சர்க்கரை வள்ளிகிழங்கு, ஓட்ஸ் ஆகியவற்றையும் எடுத்துகொள்ளலாம்.
டிரான்ஸ் கொழுப்பு சத்து, பெண்களுக்கு குழந்தையின்மை ஏற்படும் சிக்கலை அதிகரிக்கிறது. சில காய்கறிகளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், வறுத்த உருளைக்கிழங்கு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக் செய்யப்பட்ட உணவுகள் ஆகியவையில் டிராஸ் கொழுப்பு சத்து இருக்கிறது.
பி.சி.ஓ.எஸ் குறைபாடு உள்ள பெண்கள், குறைந்த கார்போஹைட்ரேட் அளவு கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பீன்ஸ் மற்றும் பருப்பு சாப்பிட்டல் அதிக நார்சத்து மற்றும் புரோட்டின் இருப்பதால், கருமுட்டைகள் வெளியாவதை ஊக்குவிக்கிறது.
சூர்ய காந்தி விதைகளில் வைட்டமின் ஈ, போலேட், சிங், ஒமேகா -3 ஆகியவை விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
ராஸ்பெரிஸ், புளுபெரிஸ், ஸ்டாபெரிஸ் ஆகியவற்றில் ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் இருப்பதால், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு குழந்தை பிறக்கும் தன்மையை அதிகரிக்கிறது.
வால்நட்டில், ஒமேக- 3 மற்றும் ஒமேகா6எஸ் ஆகியவை விந்துகளின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவம், அதன் நகர்வு வேகமாக இருக்கவும் உதவுகிறது.
உடல் பயிற்சி
உடல் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ளும் பெண்கள், மற்ற பெண்களை விட சீக்கிரமாக கற்பமாக உதவுகிறது. மேலும் கற்பமாக இருக்கும் காலத்தில், கூடுதல் உடல் உபாதைகளை அது ஏற்படுத்துவதில்லை. மேலும் பி.சி.ஓ.எஸ் குறைபாடு உள்ளவர்கள், உடல் எடை அதிகமாகிவிடுவார்கள். இதனால் அவர்கள் கண்டிப்பாக உடல் பயிற்சி செய்ய வேண்டும்.