ஈர கை வச்சு தொட்டா மாவு ஒட்டக் கூடாது... உளுந்த வடைக்கு இனி இப்படி அரைத்து பாருங்க!
உளுந்த வடை என்றால் அனைவரும் விரும்பி இரண்டு வடை அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால் அதை செய்வதற்கு என்று பக்குவம் உள்ளது. அதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
உளுந்த வடை என்றால் அனைவரும் விரும்பி இரண்டு வடை அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால் அதை செய்வதற்கு என்று பக்குவம் உள்ளது. அதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
எண்ணெயே குடிக்காமல், சுவையான மற்றும் மொறுமொறுப்பான உளுந்து வடை செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டு இனி ஈஸியாக வீட்டில் உளுந்த வடை செய்யுங்கள். எண்ணெய் அதிகம் குடித்தால் வடை சாப்பிட நன்றாக இருக்காது.
Advertisment
அதற்காகதான் மாவு தயாரிக்கும்போதே சில விசயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். எண்ணெய் குடிக்காத உளுந்துவடைக்கு எப்படி மாவு அரைப்பது என்று நிகிஸ்கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உளுந்து - 1 டம்ளர் பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் உப்பு பெருங்காயத்தூள் பச்சை மிளகாய் இஞ்சி கறிவேப்பிலை கொத்தமல்லி சீரகம் மிளகு எண்ணெய்
Advertisment
Advertisements
செய்முறை:
இந்த உளுந்து வடை செய்ய, ஒரு டம்ளர் உளுந்து, ஒரு டேபிள்ஸ்பூன் பச்சரிசி மற்றும் ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு தேவை. இவை அனைத்தையும் சரியாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும், சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கிரைண்டரில் போட்டு, மாவு கையில் ஒட்டாத பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
மாவு சரியான பதத்தில் இருக்கிறதா என்று சோதிக்க, ஈரம் செய்த கையை வைத்து தொட்டால், மாவு கைகளில் ஒட்டக்கூடாது. அரைத்த மாவுடன் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். வெங்காயம் சேர்ப்பதற்கு முன் இந்த படிநிலையை முடிப்பது அவசியம்.
வெங்காயத்தை சேர்த்த பிறகு அதிக நேரம் மாவை கலந்தால், வெங்காயம் நீர் விட ஆரம்பித்துவிடும். அடுத்து, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை மாவுடன் சேர்த்து, ஒரே திசையில் நன்கு கலக்கவும்.
இப்போது வடை சுடுவதற்கு, கையை ஈரம் செய்து கொண்டு, கட்டைவிரலில் மாவை ஒட்டி, சூடான எண்ணெயில் மெதுவாக விடவும். எண்ணெய் அதிக சூடாக இருக்கக்கூடாது; நடுத்தரமான சூட்டில் இருக்க வேண்டும். வடையை இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
அவ்வளவுதான் புசுபுசுன்னு உளுந்தவடை சுவையாகவும் டேஸ்டியாகவும் மேலே மொறுமொறுன்னு சாப்பிடவே சுவையாக இருக்கும். இதோடு சட்னி, சாம்பார் ஊற்றி சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.