ஆவாரம் பூ சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் அல்ல எல்லோருக்குமே அற்புதமான நன்மைகளை அளிக்க கூடிய சிறந்த மூலிகைகளில் ஒன்றாகும். அப்படிப்பட்ட ஆவாரம் பூவை வைத்து டீ செய்வதற்கான குறிப்புகளை பார்க்கலாம்.
ஆவாரம் பூக்கள் உலந்த நிலையில் கடைகளில் கிடைக்கும். இல்லையென்றால் தோட்டத்தில் இருந்து ஆவாரம் பூக்களை மட்டும் பறித்து அதன் அடிப்பகுதியை தண்டுகளிலிருந்து துண்டித்துவிட்டு பூக்களை மட்டும் எடுத்து மென்மையான வெள்ளைத்துணியில் பூக்களை நன்றாக பரந்த நிலையில் உலர வைக்கவும்.
வெயில் நன்றாக இருக்கும் இடத்தில் வைத்து அதன் மேல் மற்றொரு வெள்ளைத்துணியால் மூடிவும் அல்லது இளவெயிலில் 3 நாட்கள் வரை காயவைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் அதை மிக்ஸியில் மைய அரைத்து பொடியாகவும் பயன்படுத்தலாம். இல்லையென்றால் அப்படியே காய்ந்த பூவாகவும் பயன்படுத்தலாம்.
ஆவாரம்பூவில் இன்சுலின் சுரப்பைத் தூண்டும் இன்சுலின் பூஸ்டர்கள் நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.
தேவையான பொருட்கள்:
ஆவாரம் பூ பொடி
ஏலக்காய் - 2
தேன் - ஒரு டீஸ்பூன்
பால் - கால் கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு டம்ளர் நீர் ஊற்றி கொதி வந்ததும் அதில் ஆவாரம் பூ பொடி, பொடித்த ஏலக்காய் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். நீர் பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி, தேன், பால் சேர்த்து தினமும் குடிக்கலாம்.
ஆவாரம் பூ டீ குடிப்பவர்கள் பால் இல்லாமலும் குடிக்கலாம். அதுவும் உடலுக்கு நல்லது. ஆவாரம் பூ டீயினால் சர்க்கரையும் கட்டுப்படும் சர்க்கரையினால் வரும் பிரச்சனைகளான சிறுநீரகம் செயலிழப்பும் கட்டுப்படும் என மருத்துவர் தெரிவித்தார்.
மேலும் ஆவரம் பூ டீ போன்று கரிசலாங்கண்ணி, சுக்குமல்லி, முசுமுசுக்கை பொடி ஆகியவற்றை வைத்தும் டீ செய்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“