சம்மர் ஸ்டார் ஆகியாச்சு பிள்ளைகளுக்கும் சம்மர் ஹாலிடேஸ் விட்டாச்சு. அப்போ பிள்ளைகளுக்கு கடைகளில் ஸ்நாக்ஸ் வாங்கி தராமல் இனி வீட்டிலேயே செய்து கொடுங்கள். சுவையான மலாய் குல்ஃபி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஈஸியாக எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
முழு கொழுப்புள்ள பால் - 1/2 லிட்டர் பிரெஷ் கிரீம் - 1/2 கப் சர்க்கரை - 1/2 கப் ஏலக்காய் தூள் குங்குமப்பூ பாதாம் நறுக்கியது பிஸ்தா நறுக்கியது
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி பால் கொதித்ததும் சிறிதளவு பாலை எடுத்து மற்றோரு பாத்திரத்தில் ஊற்றி அதில் குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் வைக்கவும். மீதம் உள்ள பாலை பாதி அளவாக மாறும் வரை நன்கு காய்ச்சி கொள்ளவும். சிறிதளவு ஏலக்காயை தோல் நிக்கி இடித்து பொடி செய்து கொள்ளவும்.
பிறகு பாதாம் மற்றும் பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். பால் பாதியாக வற்றியதும் அதில் பிரெஷ் கிரீமை சேர்த்து கிளறவும். பின்பு சர்க்கரை சேர்த்து கலந்துவிடவும். பிறகு அதில் இடித்த ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி, குங்குமப்பூ பாலை ஊற்றவும்.
அடுத்து இதில் நறுக்கிய பாதாம், நறுக்கிய பிஸ்தாவை சேர்த்து கிளறவும். பிறகு அடுப்பை அணைத்து, நன்கு ஆறவிடவும். ஆறியதும் குல்ஃபி அச்சில் ஊற்றி 12 மணிநேரம் குளிர்விக்கவும். கேசர் மலாய் குல்ஃபி தயார்.