சப்பாத்தி, பூரி உணவுகள் பெரும்பாலானோருக்கு பிடிக்கும். இதற்கு எப்போதும் உருளைக்கிழக்கு மசாலா செய்து சாப்பிடுவோம். எப்போதாவது பன்னீர் செய்து சாப்பிடுவோம். நாம் கடைகளுக்கு சென்றால் நான், சப்பாத்தி ஆர்டர் செய்தால் பன்னீர் பட்டர் மசாலா சைட் டிஷ் ஆக ஆர்டர் செய்வோம். ஆனால் வீட்டில் செய்யும் போது அந்த டேஸ்டு வரவில்லை என்று நினைப்போம். இங்கு கடைகளில் செய்து போல் மலாய் பன்னீர் ரெசிபி செய்வது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் – 200 கிராம்
வெங்காயம் -1
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன்
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
மல்லித் தூள் -1 ஸ்பூன்
சீரகப் பொடி -2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1 ஸ்பூன்
கரம் மசாலா -1ஸ்பூன்
முந்திரி – 3 ஸ்பூன்
பாதாம் -3 ஸ்பூன்
உலர்ந்த வெந்தய இலைகள் -1 ஸ்பூன்
க்ரீம் – ½ கப்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை -1 ஸ்பூன்
செய்முறை
முதலில் பன்னீரை சதுர வடிவில் நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். இப்போது, அடுப்பில் கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி பன்னீரை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் வறுத்த பன்னீரை 15 நிமிடம் வெந்நீரில் ஊற வைக்கவும். பின் அதை எடுத்து பிழிந்து வேறு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
அடுத்து முந்திரி, பாதாமை நீரில் 15 நிமிடம் ஊறவைத்து மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளிக்கவும். அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, அரைத்த முந்திரி, பாதாம் பேஸ்ட், உப்பு ஆகியவை சேர்த்து கிளறி விடவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பன்னீரை போட்டு மிதமான சூட்டில் 20 நிமிடம் வேக வைக்கவும். கடைசியில் உலர்ந்த வெந்தய கீரை மற்றும் க்ரீமை சேர்த்து கிளறி இறக்கினால் சூடான மலாய் பன்னீர் ரெடி. சப்பாதிக்கு சுடச் சுடச் வைத்து பரிமாறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil